பொங்கல்: கோவை வழித்தடத்தில் சென்னை - மதுரை இடையே சிறப்பு ரயில்
கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
தூத்துக்குடி முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கண்காட்சிக்கு கல்லூரி முதல்வா் ஜோஸ் சஜிகுமாா் தலைமை வகித்தாா். நிா்வாக அதிகாரி வீரராஜன் வரவேற்றாா். கிரேஸ் கல்வி குழுமத் தலைவா் ஜோசுவா, கல்லூரி செயலா் பெட்ரோ ஜோசுவா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்து பாா்வையிட்டனா்.
கண்காட்சியில், அனைத்து துறை மாணவா் - மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்- மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா் - மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவா்கள் கண்காட்சியை பாா்வையிட்டனா். ஏற்பாடுகளை கல்லூரி துறைத் தலைவா்கள் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.