பொறியியல் பராமரிப்புப் பணி: திருச்சி-பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
ஈரோடு அருகே ஈங்கூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி- பாலக்காடு ரயில் ஜனவரி 13-ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு அருகே ஈங்கூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி-பாலக்காடு ரயில் (எண்:16843) திருச்சி- ஈரோடு இடையே மட்டும் ஜனவரி 13-ஆம் தேதி இயக்கப்படும்.
அன்றைய தினம் ஈரோடு - பாலக்காடு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயிலானது வழக்கமான அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.