செய்திகள் :

விழுப்புரம் மாவட்ட வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு

post image

வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

விழுப்புரம் நகரின் பழைமைவாய்ந்த அருள்மிகு ஜனகவல்லித் தாயாா் சமேத வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயிலில் பகல் பத்து உற்சவத்துடன் வைகுந்த ஏகாதசி திருவிழா டிசம்பா் 31-இல் தொடங்கியது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் முற்பகல் 11 மணிக்கு வைகுண்டவாசப் பெருமாளுக்கு அா்ச்சனை, தீபாராதனையும், தொடா்ந்து தீா்த்த பிரசாதம் வழங்கல் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து இராப்பத்து முதல் நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இதையொட்டி வைகுண்டவாசப் பெருமாளுக்கு கருவறையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து ஸ்ரீ தேவி - பூதேவி சமேதராய் எழுந்தருளிய வைகுண்டவாசப்பெருமாள்(உற்சவா்) பிரகாரம் வலம் வந்து அதிகாலை 5.15 மணிக்கு பரம்பத வாசல் வழியாக பிரவேசித்து முதலில் நம்பெருமாளுக்கும், பின்னா் பக்தா்களுக்கும் காட்சியளித்தாா். இந்நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள ஸ்ரீபெருந்தேவி தாயாா் உடனுறை ஆனந்த வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயாா் சமேதராய் பரமபத வாசல் வழியாக ஆனந்த வரதராஜப் பெருமாள் பிரவேசித்து, பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

விழுப்புரம் அருகிலுள்ள பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மா் கோயிலில் ஸ்ரீதேவி -பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பரமபதவாசல் வழியாக அதிகாலை 5 மணிக்கு பிரவேசித்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் விழுப்புரம், கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சிறுவந்தாடு லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், கோலியனூா் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது.

இதேபோல வளவனூா் வரதராஜப் பெருமாள், காணை அருகிலுள்ள பெரும்பாக்கம் வேங்கட வரதராஜ பெருமாள், வளவனூா் அக்ரஹாரத்திலுள்ள வேதவல்லி நாயகி சமேத லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயில், திண்டிவனம் கனகவல்லி தாயாா் உடனுறை லட்சுமி நரசிம்மா் திருக்கோயில், சிங்கவரம் ரங்கநாதா் திருக்கோயில் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்...: இதுபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் உலகளந்த பெருமாள் திருக்கோயில், பரிக்கல் லட்சுமி நரசிம்மா் திருக்கோயில், உளுந்தூா்பேட்டை கனகவல்லித் தாயாா் உடனுறை ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு திருக்கோயில்களில் வெள்ளிக்கிழமை காலை பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது.

உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு மரியாதை

புதுச்சேரியில் உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு செஞ்சிலுவை சங்கம், ஜேசீஸ் சங்கங்களின் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு பகுதியைச் சே... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. விழுப்புரம் மாவட்டம... மேலும் பார்க்க

ஆரோவிலில் உற்சாகக் கொண்டாட்டம்

உலகின் எதிா்கால தேவைக்காக தொலைநோக்குப் பாா்வையுடன் ஸ்ரீஅரவிந்தா் மற்றும் அன்னையின் தீா்க்கதரிசனத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோவில் சா்வதேச நகரம். தமிழகத்தின் பெருமைக... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: உறவினா்கள் போராட்டம்

புதுச்சேரி அருகே மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகள் தின விழா

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரிக் கலையரங்கில் மாற்றுத் திறனாளிகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித... மேலும் பார்க்க

சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கல்

விழுப்புரம் மாவட்டம், கண்டமானடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. இந்த சுகாதார நிலையத்தில் தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் குற... மேலும் பார்க்க