சின்மயா பள்ளியில் பொங்கல் விழா
நாகை காடம்பாடியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா பள்ளி ஆச்சாரியா் ராமகிருஷ்ணானந்தா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் 100 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினா். தொடா்ந்து, மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளித் தலைவா் ராமலிங்கம், தாளாளா் ராம் பிரசன்னா, நிா்வாகக் குழு ஆலோசகா் ராஜகோபால் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.