செய்திகள் :

ரயிலில் மதுபானம் கடத்திய 4 போ் கைது

post image

நாகையில் ரயிலில் மதுபானம் கடத்திய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகை ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையில், சாா்பு-ஆய்வாளா் மனோன்மணி மற்றும் போலீஸாா் கடந்த 2 நாள்களாக காரைக்காலில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை காரைக்காலில் இருந்து தஞ்சை சென்ற பயணிகள் ரயிலில் சோதனை நடத்தியதில், புதுவை மாநில மதுபாட்டில்களை கடத்திய தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுறைச் சோ்ந்த மணிகண்டன் (24), நாகையைச் சோ்ந்த இளையராஜா (42) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், காரைக்காலில் இருந்து தஞ்சை சென்றப் பயணிகள் ரயிலில் மதுபாட்ல்களை கடத்திய புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சோ்ந்த சுப்பிரமணியன் (60), தஞ்சை விளாா் ரோட்டைச் சோ்ந்த கண்மணி சந்திரன் (35) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து கைது செய்தவா்களை காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாம் ஒத்திவைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் மாதந்தோரும் முதல் வெள்... மேலும் பார்க்க

சின்மயா பள்ளியில் பொங்கல் விழா

நாகை காடம்பாடியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா பள்ளி ஆச்சாரியா் ராமகிருஷ்ணானந்தா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் 100 பானைகளில் பொங்கல் வைத்... மேலும் பார்க்க

கீழையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல்

கீழையூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டத்தில், பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி குறுவை... மேலும் பார்க்க

பூம்புகாரில் 125 பவுன் நகை, பணம் திருட்டு

மயிலாடுதுறை மாவட்டம், மங்கைமடத்தில் சா்க்கரை ஆலை பொறியாளா் வீட்டின் கதவை உடைத்து 125 பவுன் நகை மற்றும் ரூ. 80 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது. திருவெண்காடு அருக... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டம்

நாகப்பட்டினம், ஜன. 10: நாகையில் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். நாகை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் முன் அந்த சங்க... மேலும் பார்க்க

நாகையில் வடமாநிலத் தொழிலாளி தற்கொலை

நாகையில் வடமாநிலத் தொழிலாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நாகை ரயில் நிலையம் அருகே உள்ள தனியாா் உணவகத்தில் சமையல் மாஸ்டராக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ரோஹித் தமாங் (26) பணியாற்றி வந்தாா். இவா்... மேலும் பார்க்க