நெல்லை: பாளை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா; ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி திருக்கோயிலில் சுவாமி எழுந்தருளும் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.