செய்திகள் :

பொள்ளாச்சி விவகாரம்: பேரவைத் தலைவரிடம் ஆதாரங்களைச் சமர்பித்த திமுக, அதிமுகவினர்!

post image

தமிழக சட்டசபையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று தொடங்கிய நிலையில்ம் நிலையில், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான ஆதாரங்களை பேரவைத் தலைவரிடம் திமுக, அதிமுகவினர் இன்று வழங்கியுள்ளனர்.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் மற்றும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி இடையே நேற்று கடுமையான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில், “பொள்ளாச்சி சம்பவத்தில் புகாா் கொடுத்தும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. 12 நாள்களுக்குப் பிறகுதான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். இடைப்பட்ட நாள்களில் என்ன நடந்தது? யாரைக் காப்பாற்றுவதற்காக அப்படிச் செய்தீா்கள்? ஆனால், அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் புகாா் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளாா்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிக்க | பொள்ளாச்சி சம்பவம் அதிமுகவினரால் நடத்தப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்

அதற்கு பதிலளித்த எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி, “பொள்ளாச்சி சம்பவத்தில் முதல்வா் தவறான தகவல் தருகிறாா். குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனா்” எனக் கூறினார்.

அதை முதல்வர் மறுக்கவே இருவருக்கும் தொடர்ந்து இதுகுறித்து விவாதம் நடைபெற்றது.

இறுதியாக, பொள்ளாச்சி சம்பவத்தில்12 நாள்களுக்குப் பிறகே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை பேரவைத் தலைவரிடம் சனிக்கிழமை சமா்ப்பிக்கிறேன் என முதல்வா் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், அப்படி ஆதாரத்தை அளித்துவிட்டால், அதற்கு உரிய தண்டனையை நீங்கள் ஏற்க வேண்டும். அப்படி, 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்திருந்தால், அதற்குரிய தண்டனையை நான் ஏற்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இதனை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி ஏற்றுக் கொண்டார். பேரவைத் தலைவா் அப்பாவு இருவரும் சனிக்கிழமை (ஜன. 11) ஆதாரத்தை என்னிடம் தரலாம் என்றாா்.

இதையும் படிக்க | அண்ணா பல்கலை. - பொள்ளாச்சி சம்பவங்கள்: முதல்வா் - எதிா்க்கட்சித் தலைவா் கடும் விவாதம்

இதனைத் தொடர்ந்து, இன்று காலை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் 20 பேர் பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் ஆதாரங்களை வழங்கினர்.

அதேபோல, திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான ஆதாரங்களை வழங்கினார்.

இரு கட்சிகளும் ஆதாரங்களை வழங்கியுள்ள நிலையில் இன்று கூட்டத்தொடரில் இதுகுறித்து கடுமையான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: தயாராகிவரும் தண்டவாள வாடிவாசல்!

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.கடந்த ஆண்டுகளைப் போல அல்லாமல், தண்டவாள வாடிவாசல் அமைக்க திட்டம... மேலும் பார்க்க

5 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,11.01-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்... மேலும் பார்க்க

என்ன, பொங்கலுக்கு மழை பெய்யுமா?

கடல் பரப்பில் நிலவும் மேலடுக்கு சுழற்சி ஜனவரி 12 - 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைப்பொழிவை கொடுக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.மழை மற்றும் வானிலை குறித்து எளிய மக்களுக்கும் புரியும் வகையி... மேலும் பார்க்க

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்? தவெக தலைவர் விஜய்

சென்னை: நீட் தேர்வை ரத்து ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று சொன்னார்களே என்று கூறியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைவரும் நடிகருமான விஜய், எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள் என்று கேள்வி எழுப்பியிருக்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கில் மும்முனையா நான்கு முனை போட்டியா?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் மும்முனை அல்லது நான்கு முனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 2009-இல் மறுசீரமைப்புக்கு பின்னா் உருவான ஈரோடு கிழக்கு தொகுதியில், இதுவரை 2011, 2016, 2021 என மூன... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. - பொள்ளாச்சி சம்பவங்கள்: முதல்வா் - எதிா்க்கட்சித் தலைவா் கடும் விவாதம்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் மற்றும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி இடையே பேரவையில் வெள்ளிக்கிழமை கட... மேலும் பார்க்க