செய்திகள் :

அவலட்சண முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் உலக சாம்பியன்ஷிப் போட்டி!

post image

இங்கிலாந்து நாட்டில் அவலட்சண முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

வடமேற்கு இங்கிலாந்து நாட்டின் கும்பிரியா எனும் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவலட்சணமான முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் அசாதாரண போட்டியான, உலக கர்னிங் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த வருடம் அங்கு நடைபெற்ற கிராப் கண்காட்சியில் நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் பங்குபெறும் போட்டியாளர்கள் அனைவரும் மேடையில் ஏறி தங்களது முகத்தை சுளித்து பல்வேறு வினோத பாவணைகள் செய்து அவலட்சணமான முகத் தோற்றத்தை உருவாக்கிக்காட்ட வேண்டும்.

இதையும் படிக்க:லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 10-ஆக உயா்வு

அதில் யாருடைய முகம் அருவருப்பாகவும் அவலட்சணமான தோற்றத்தை வெளிப்படுகிறதோ அவருக்கு நடுவர்கள் அளிக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பிரிவாக போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்த போட்டிகளில், டாமி மேட்டின்சன் என்பவர் 18 முறை உலக கர்னிங் சாம்பியன்ஷிப் வென்று உலக சாதனைப் படைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் அவரது அப்பா 10 முறை உலக கர்னிங் சாம்பியனாக இருந்ததாகவும், அந்த பாரம்பரியத்தை கடைபிடித்து தானும் இந்த போட்டியில் பங்கேற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டாயிரத்து நூற்றைந்து போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 200 நாள்கள் ... மேலும் பார்க்க

கிராமவாசிகள் நோய்வாய்ப்பட தடை! எங்கு?

இத்தாலி நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள பெல்காஸ்ட்ரோ எனும் கிராமத்தில் உள்ளூர் மக்கள் நோய்வாய்ப்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கட்டன்சாரோ மாகாணத்திலுள்ள பெல்காஸ்ட்ரோ எனும் கிராமத்தின் மேயர் அண்ட... மேலும் பார்க்க

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரா?

தமிழக பாஜகவில் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் 17 ஆம் தேதி மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பாஜக தேசிய தலைமை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தலை... மேலும் பார்க்க

பெரியாா் குறித்து அவதூறு பேச்சு: விரைவில் கைதாகும் சீமான்?

பெரியாா் குறித்து அவதூறாகப் பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தமிழகம் முழுவதும் 70 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் சீமான் கைது செய்யப்படுவார்... மேலும் பார்க்க

மாணவ, மாணவிகள் "அப்பா, அப்பா" என அழைப்பது அளவில்லா மகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு மாணவ, மாணவிகள் என்னை "அப்பா, அப்பா" என வாய்நிறைய அழைக்கும்போது அளிவில்லை மகிழ்ச்சி அடைகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: திடீர் முடி உதிர்வு..வழுக்கையாகும் நிலை! பொதுமக்கள் அச்சம்!

மகாராஷ்டிர மாநிலத்தின் புல்தான மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்களின் பொதுமக்கள் சிலருக்கு திடீரென வழக்கத்தை விட அதிகமான தலைமுடி உதிர்ந்து, வழுக்கையாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.அம்மாவட்டத்தின் ... மேலும் பார்க்க