செய்திகள் :

ஈரோடு கிழக்கு தொகுதி : அப்செட்டில் கதர்கள் - திமுக வசம் சென்ற பின்னணி!

post image

கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வாக திருமகன் ஈவேரா வெற்றிபெற்றார். இவர் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார். திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த 14.12.2024 அன்று இளங்கோவனும் மறைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காளியானதாகச் சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம், 'ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 10-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடக்கும்" என அறிவித்தனர். இதன்படி வேட்புமனு தாக்கல் தொடங்கியிருக்கிறது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

முன்னதாக இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் இடையே தீவிரமான போட்டி நிலவியது. இதில் சஞ்சய் சம்பத்துக்கு மீண்டும் சீட் கொடுக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். மறுபக்கம் 'ஒரே குடும்பத்துக்கு மீண்டும் மீண்டும் சீட் கொடுக்க கூடாது' என எதிர்ப்பும் கிளம்பியது. அடுத்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர் மக்கள் ராஜன் சீட் பெறுவதற்கு தீவிரம் காட்டினார். இதேபோல் இளங்கோவனின் தீவிர ஆதரவாளராக இருந்து பின்னாளில் அவரிடமிருந்து விலகிய முன்னாள் மாவட்ட தலைவர் ஈபி ரவியும் முயன்று வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் தலைமை, தி.மு.கவுடன் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும். வேட்பாளர் யார் என்பது இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியை பொருத்தமட்டில், ஏற்கனவே காங்கிரஸ் வசம்தான் உள்ளது" என தெரிவித்திருக்கிறார். இதனால் தங்களுக்கு தான் சீட் என கதர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

செல்வப்பெருந்தகை

இதற்கிடையில், "காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு நாம் ஏன் ஒவ்வொரு முறையும் செலவு செய்ய வேண்டும். கடந்த முறை நடத்த இடைத்தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. இந்தியா கூட்டணி சார்பில் ராகுல் பிரதமராகிவிட்டால், நமக்கு உதவியாக இருக்கும் என நினைத்துத்தான் கூட்டணிக்குள் மனக்கசப்பை ஏற்படுத்த வேண்டாம் எனக் காங்கிரஸுக்கு சீட் கொடுத்தோம். கூடவே இளங்கோவனை வெற்றிபெற வைத்தோம். நினைத்தது நடக்கவில்லை . எனவே இந்த முறை நாமே நிற்கலாம்" எனத் தலைமைக்கு தி.மு.கவினர் கோரிக்கை வைத்தனர். அக்கட்சியில் தி.மு.க கொள்கை பரப்பு துணைத் செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் இடையே போட்டி நிலவியது.

இருவரும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கூடவே இருவரும் அமைச்சர் முத்துச்சாமியின் தீவிர ஆதரவாளர்கள். இதில் தே.மு.தி.க-வில் இருந்து விலகி தி.மு.க-வில் இணைத்தவர், சந்திரகுமார். இவருக்கு 2016 சட்டசபைத் தேர்தலின்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் சீட் வழங்கியது, தி.மு.க. முடிவில் அ.தி.மு.க வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவிடம் தோல்வியைச் சந்தித்தார். பிறகு நடத்தத் தேர்தல்களில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. எனவே இந்தமுறை தனக்கு வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார், சந்திரகுமார். இதுகுறித்து கடந்த டிசம்பர் 26-ம் தேதி, 'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்' - நான்கு முனை போட்டியில் பவன்!' என்கிற தலைப்பில் விகடன் டிஜிட்டல் பக்கத்தில் எக்ஸ்குளூசிவ் கட்டுரை எழுதியிருத்தோம்.

விகடன் எக்ஸ்குளூசிவ் கட்டுரை

இதன்படி ஈரோடு கிழக்கு வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டிருக்கிறார். முன்னதாக இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், "ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மறைவு அடைந்ததையோட்டி இடைத்தேர்தல் வரவிருக்கிறது. 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், முதல் அமைச்சர் மற்றும் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்" எனக் கூறியிருக்கிறார்.

பிறகு தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "பிப்ரவரி 5-ம் தேதி நடக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார்" என தெரிவித்துள்ளார். இதனால் கதர்கள் அப்செட் ஆகியுள்ளார்கள்.

முதல்வர் ஸ்டாலின்

காங்கிரஸுக்கு மீண்டும் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி எப்படி திமுக பக்கம் சென்றது என்கிற கேள்விக்கு பதிலளித்து பேசிய விவரப்புள்ளிகள், "கடந்த முறை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிபெறுவதற்கு தி.மு.க அதிகம் உழைத்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கேட்ட இடங்களையும் கொடுத்தார்கள். இந்தமுறையும் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸுக்கு கொடுப்பதற்கு தி.மு.க தயாராக இருந்தது. ஆனால் அந்த கட்சிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாம் ஏன் ஒவ்வொரு முறையும் செலவு செய்து வெற்றிபெற வைக்க வேண்டும் என தலைமைக்கு அழுத்தம் கொடுத்தனர்.

இதற்கிடையில் சட்டமன்ற நிகழ்வுகள் ஒளிபரப்புவது குறித்து காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், "இது சரியா?.. மாண்புமிகு ஒம்பிர்லா அவர்களின் வழியில்" என தி.மு.கவை விமர்சனம் செய்யும் வகையில் பதிவிட்டிருந்தார். முன்னதாக அவரை கடினமாக போராடி தி.மு.க வெற்றிபெற வைத்திருந்தது. இதுவும் தி.மு.க-வினரை கடுப்பாக்கியது. இதனால், 'இந்தமுறை நாமே நிற்கலாம்' என, அழுத்தம் கொடுத்தனர். இதையடுத்துதான் தி.மு.க வேட்பாளரையே களமிறக்கலாம் என ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார். பிறகு ராகுல் காந்தியை தொடர்பு கொண்டு பேசிய ஸ்டாலின் தரப்பு, "இரண்டு முறையும் காங்கிரஸ் வெற்றிக்கு தி.மு.க கடுமையாக உழைத்து. இந்தமுறை தி.மு.க நிற்க வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்" என தெரிவித்திருக்கிறார்கள்.

சத்தியமூர்த்தி பவன்

இதையடுத்து டெல்லியிலிருந்து கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறது. பிறகு செல்வப்பெருந்தகையிடம் பேசிய ஸ்டாலின் தரப்பு விஷயத்தை சொல்லியிருக்கிறது. அவரும் உடனே ஓகே சொல்லிவிட்டார். பிறகுதான் செல்வப்பெருந்தகையின் அறிக்கையும் வெளியானது. முன்னதாக தி.மு.க சம்மதம் தெரிவிக்காமலே, செல்வப்பெருந்தகை காங்கிரஸ்தான் போட்டியிடும் என தெரிவித்ததும் அறிவாலய சீனியர்களை கடுப்பாக்கியது. எனவேதான் இந்தமுடிவை எடுத்தனர். ஆனால் இந்த முடிவு அடிமட்ட காங்கிரஸ் தொண்டர்களை கொதிப்படைய செய்திருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில், தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவோம் என சொல்லிவிட்டு, கைவசம் இருந்த தொகுதியையும் இழந்து நிற்பதாக சாடுகிறார்கள் தொண்டர்கள். " என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

திமுக சொல்லி தான் செய்தீர்களா?; `நான் சொல்லக்கூடாது, ஆனாலும் சொல்கிறேன்’ - வேல்முருகன் எக்ஸ்க்ளூஸிவ்

`பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத அரசியல் தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர், ஆளுநர் செயல்பாடு, ஆளும் கட்சி செயல்பாடு உள்ளிட்ட நமது பல்வேறு கேள்விகளுக்க... மேலும் பார்க்க

விகடன் கருத்துக்கணிப்பு : `எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை முடக்குகிறதா திமுக?' - முடிவுகள் என்ன?

சென்னையின் பிரபல அண்ணா பல்கலைக் கழகத்தின் மாணவி ஒருவர் கடந்த மாதம் 24-ம் தேதி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரம், தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 'யார் அந்த சார்?' என்ற கே... மேலும் பார்க்க

இத்தாலி பிரதமர் உடனான மீம்ஸ்... பிரதமர் மோடி சொன்னதென்ன?

ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கிய 'People by WTF' தொடரில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், மற்ற நாடுகளின் உணவுகள் குறித்துப் பேசும்... மேலும் பார்க்க

``ரகசியம் தெரியும் என்றனர்; எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..!" - சாடும் விஜய்

ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக தேர்தல் பிரசாரத்தில் பேசிய நிலையில், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நெருங்கும் நிலையி... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு; யார் இந்த வி.சி.சந்திரகுமார்?

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த மாதம் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ஆம் தேதி இந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் எ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பின்வாங்கிய காங்கிரஸ்; களமிறங்கும் திமுக; வேட்பாளர் யார்?

ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருந்தார். அதனால், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவ... மேலும் பார்க்க