செய்திகள் :

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்: வி.சி. சந்திரகுமார்

post image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார். இதையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதை காங்கிரஸ் நிர்வாகிகள் இணைந்து ஒரு மனதாக முடிவு செய்ததாக தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.

இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து சனிக்கிழமை வாழ்த்து பெற்றார். தொடர்ந்து சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு சென்ற வி.சி. சந்திரகுமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக என்னை அறிவித்த முதல்வருக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த துணை முதல்வருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலை பொருத்தவரையில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறப் போகிறது.

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தலில் இப்படி ஒரு வெற்றியை பெற்றதில்லை என்ற வரலாற்றை முறியடிக்கும் வகையில் வெற்றி பெறுவோம். சாதி, மத அடிப்படையில் யாருக்கும் எந்த இடத்திலும் இடம் கொடுக்கப் படுவதில்லை, ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டதுதான் திமுக கூட்டணி என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், திமுகவின் வெற்றி வேட்பாளர் சந்திரகுமார் இங்கு வந்திருக்கிறார். அவரை நாங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆக்குவோம். எங்களுடைய வெற்றி வேட்பாளரை காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறோம், விட்டுக்கொடுத்ததில் எங்களுக்கு பின்னடைவில்லை.

இதைவிட வருங்காலங்களில் திமுக எங்களுக்கு விட்டுக் கொடுக்கும். பிடுங்கி எடுப்பது வேறு கேட்டு பெறுவது என்பது வேறு. எந்தவித சங்கடமும் இல்லாமல் நாங்கள் இந்த தேர்தலுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொங்கல் முடிந்ததும் பரந்தூர் செல்கிறார் விஜய்

ஜனவரி 3ஆவது வாரத்தில் பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் செல்லவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள்... மேலும் பார்க்க

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை கொளத்தூரில் சமத்துவப் பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்தூரில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்ட... மேலும் பார்க்க

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள்: ஜன.13-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

பொங்கல் விழாவையொட்டி ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை ஜன.13ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னையில், தை மாதம... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேமுதிக புறக்கணிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்ணிக்கப் போவதாக கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகையால் ராக்கெட்டில் பறந்த விமான டிக்கெட்!

தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை என்பதால், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கட்டுக்கடங்காத கூட்டம் சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் நிலையில், விமான டிக்கெட் விலையும் கடுமையாக உயர... மேலும் பார்க்க

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! மதுரை காவல் அதிகாரி கைது!

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிறப்பு காவல் ஆய்வாளர் ஜெயபாண்டி கைது செய்யப்பட்டார்.மதுரையில் திருக்கார்த்திகை (டிச. 13) விழாவின்போது, திருப்பரங்குன்றத்துக்கு சென்ற 14 வயது சிறுமி... மேலும் பார்க்க