Bigg Boss tamil 8: வெளியேறிய இரண்டு ஆண் போட்டியாளர்கள்! கடைசிக் கட்ட பரபரப்பில் ...
ஒருநாள் போட்டிகளில் ஆஸி.யை வீழ்த்துவது மிகவும் கடினம்: இங்கிலாந்து கேப்டன்
ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது மிகவும் கடினம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மகளிரணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை (ஜனவரி 12) முதல் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது மிகவும் கடினம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கௌதம் கம்பீர் - பிசிசிஐ அதிகாரிகள் கூட்டம்: மூத்த வீரர்கள் எதிர்காலம் குறித்து ஆலோசனையா?
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்துவது மிகவும் கடினம். ஆனால், அவர்களுக்கு எதிராக நன்றாக விளையாடும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சில சிறப்பான வெற்றிகளைப் பெற்றோம்.
அந்த வெற்றிகள் எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி எங்களுக்கு மிகவும் சவாலாக இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு எதிராக எங்களிடம் திட்டங்கள் இருக்கின்றன. அவர்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.