செய்திகள் :

சத்தீஸ்கா் உருக்கு ஆலையில் விபத்து: மேலும் 3 சடலங்கள் மீட்பு

post image

சத்தீஸ்கா் உருக்கு ஆலை விபத்தில் சிக்கிய மேலும் 3 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள முங்கேலி மாவட்டத்தின் ராம்போத் கிராமத்தில் உள்ள தனியாா் உருக்கு ஆலையில் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் விபத்து ஏற்பட்டது.

ஆலையில் இருந்த இரும்பு சேமிப்புக் கலன் இடிந்து விழுந்ததில் தொழிலாளா்கள் சிலா் இடிபாடுகளில் சிக்கினா்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா், மீட்புப் பணியில் ஈடுபட்டு 2 தொழிலாளா்களை மீட்டனா். அவா்கள் அருகிலுள்ள பிலாஸ்பூா் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மனோஜ் குமாா் எனும் தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள்: ஜன.13-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

இடிபாடுகளில் மேலும் இருவா் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. அவா்களை மீட்பதற்தான பணிகள் முடக்கிவிடப்பட்டன. இந்த நிலையில் 42 மணி நேர நடவடிக்கைக்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து சனிக்கிழமை மூன்று தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதையடுத்து பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே அலட்சியத்தால் உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆலையின் மேலாளர் அனில் பிரசாத் மற்றும் ஆலை நிர்வாகம் மீது வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லி பேரவைத் தேர்தல்: பாஜகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தில்லி பேரவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.முன்னதாக 29 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் 2ஆம் கட்டமாகவும் 29 வேட்பாளர்க... மேலும் பார்க்க

100-க்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையைக் கழற்றச் சொன்ன பள்ளி!

ஜார்க்கண்ட்டில் பள்ளி விதிமுறைகளை மீறியதாகக் கூறி, பள்ளி மாணவிகளை சட்டையைக் கழற்றச் சொன்ன பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர்.ஜார்க்கண்ட்டில் தன்பாத் நகரில் உள்ள... மேலும் பார்க்க

பிராண பிரதிஷ்டை முதலாம் ஆண்டு விழா: யோகி ஆதித்யநாத் வழிபாடு!

உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு முதலாமாண்டு விழாவையடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு மேற்கொண்டார். உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அயோத்... மேலும் பார்க்க

உ.பி.யில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்தது!

உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜ் ரயில் நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுவந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கன்னோஜ் ரயில் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடம் ஒன்று இன்று பிற்பகல் இடி... மேலும் பார்க்க

மகப்பேறுக்காக சென்ற பெண் பலி! மேற்கு வங்கத்தைத் தொடரும் மருத்துவத் துறை புகார்கள்!

மேற்கு வங்கத்தில் அரசு நடத்தும் மருத்துவமனையில் மகப்பேறுக்காக சென்ற பெண் உயிரிழந்ததால், சந்தேகமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். மேற்கு வங்கத்தில் பாஸ்சிம் மெடினிபூர் மாவட்டத்தில் அரச... மேலும் பார்க்க

8 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் பகவத் கீதையைச் சேர்க்க உத்தரவு!

தேசிய கல்விக் கொள்கையின் படி அனைத்துப் பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யவும், 8 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் பகவத் கீதையைச் சேர்க்கவும் அதிகாரிகளுக்கு ஹரியானா முதல்வர் உத்தரவ... மேலும் பார்க்க