செய்திகள் :

100-க்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையைக் கழற்றச் சொன்ன பள்ளி!

post image

ஜார்க்கண்ட்டில் பள்ளி விதிமுறைகளை மீறியதாகக் கூறி, பள்ளி மாணவிகளை சட்டையைக் கழற்றச் சொன்ன பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர்.

ஜார்க்கண்ட்டில் தன்பாத் நகரில் உள்ள கார்மெல் பள்ளியில் பள்ளியின் கடைசி நாளைக் கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் சட்டைகளில் வாழ்த்துகளை எழுதி கொண்டாடினர். இந்த நிலையில், பள்ளி நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும்விதமாக மாணவிகள் செயல்பட்டதாக பள்ளி முதல்வர் கூறியதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், தங்கள் பள்ளி மாணவிகள் அழுக்கு உடைகளோடு வெளியில் செல்வதை விரும்பவில்லை என்று கூறிய பள்ளி நிர்வாகம், 100-க்கும் மேற்பட்ட 10ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளின் சட்டையைக் கழற்ற வற்புறுத்தியுள்ளனர். பள்ளி சென்ற மாணவிகள் வெறும் மேலாடையுடன் வீட்டுக்கு வருவதை அறிந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் மீது துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதையும் படிக்க:வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்!

புகாரில் அவர்கள் தெரிவித்ததாவது, ஆண் ஆசிரியர்களுக்கு மத்தியில் மாணவிகள் சட்டையைக் கழற்றக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், மாணவிகள் மனதளவில் பாதிக்கப்பட்டதுடன், மீண்டும் பள்ளிக்குச் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். மாணவிகள் மீதான இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின்போது, மாணவிகளின் செல்போன்களும் பறிக்கப்பட்டுள்ளன. பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை’’ என்று கூறியுள்ளனர். புகாரை விசாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதுடன், விசாரணையின் முடிவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை ஆணையர் மாதவி மிஸ்ரா தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும்: மத்திய அமைச்சா் ஷெகாவத்

‘பருவநிலை மாற்றம் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும். எனவே, ஒவ்வொருவரும் இந்த பூமி கோளின் உரிமையாளா்களாக அல்லாமல் பாதுகாவலா்களாக செயல்பட வேண்டும்’ என்று மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தேர்தல்: பாஜகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தில்லி பேரவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.முன்னதாக 29 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் 2ஆம் கட்டமாகவும் 29 வேட்பாளர்க... மேலும் பார்க்க

சத்தீஸ்கா் உருக்கு ஆலையில் விபத்து: மேலும் 3 சடலங்கள் மீட்பு

சத்தீஸ்கா் உருக்கு ஆலை விபத்தில் சிக்கிய மேலும் 3 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள முங்கேலி மாவட்டத்தின் ராம்போத் கிராமத்தில் உ... மேலும் பார்க்க

பிராண பிரதிஷ்டை முதலாம் ஆண்டு விழா: யோகி ஆதித்யநாத் வழிபாடு!

உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு முதலாமாண்டு விழாவையடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு மேற்கொண்டார். உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அயோத்... மேலும் பார்க்க

உ.பி.யில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்தது!

உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜ் ரயில் நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுவந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கன்னோஜ் ரயில் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடம் ஒன்று இன்று பிற்பகல் இடி... மேலும் பார்க்க

மகப்பேறுக்காக சென்ற பெண் பலி! மேற்கு வங்கத்தைத் தொடரும் மருத்துவத் துறை புகார்கள்!

மேற்கு வங்கத்தில் அரசு நடத்தும் மருத்துவமனையில் மகப்பேறுக்காக சென்ற பெண் உயிரிழந்ததால், சந்தேகமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். மேற்கு வங்கத்தில் பாஸ்சிம் மெடினிபூர் மாவட்டத்தில் அரச... மேலும் பார்க்க