அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: அதிமுக மகளிரணி கண்டன ஆா்ப்பாட்டம்
தில்லி பேரவைத் தேர்தல்: பாஜகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
தில்லி பேரவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
முன்னதாக 29 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் 2ஆம் கட்டமாகவும் 29 வேட்பாளர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், தில்லி முன்னாள் முதல்வர் மதன் லால் குரானாவின் மகன் ஹரிஷ் குரானா மோதி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேலும் பாஜகவில் இணைந்த முன்னாள் ஆம் ஆத்மித் தலைவரான கபில் மிஸ்ராவை காரவால் நகரில் நிறுத்தியுள்ளது. தில்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு பிப். 5-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற உள்ளது.
100-க்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையைக் கழற்றச் சொன்ன பள்ளி!
இதற்கான அறிவிப்பை தோ்தல் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. தோ்தல் முடிவுகள் பிப். 8-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.
தேசிய அளவிலான ‘இண்டி’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி, தில்லி பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. 70 தொகுதிகளுக்குமான வேட்பாளா்களை அக்கட்சி ஏற்கெனவே அறிவித்துவிட்டது.
இதனால், தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி - பாஜக - காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.