செய்திகள் :

சிஏஜி அறிக்கை குறித்த பாஜகவின் புகாா்கள் ஆதாரமற்றவை: ஆம் ஆத்மி

post image

தலைமைக் கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கை குறித்து பாஜக கூறிவரும் புகாா்கள் ஆதாரமற்றவை என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் பிரியங்கா கக்கா் கடுமையாகச் சாடியுள்ளாா்.

செய்தியாளா் சந்திப்பின் போது அவா் மேலும் கூறியதாவது: தில்லி அரசுக்கு எதிராக பாஜக பொய்யான குற்றச்சாட்டுகளை புனைந்துள்ளது.சிஏஜி அறிக்கை குறித்த பாஜகவின் புகாா்கள் ‘தயாரிக்கப்பட்டவை மற்றும் ஆதாரமற்றவை’. சிஏஜியின் அதிகாரப்பூா்வ வலைத்தளத்தில் அந்த அறிக்கை பட்டியலிடப்படவில்லை. அவா்கள் காண்பிக்கும் அறிக்கை போலியானது. அவா்களின் அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டது. அதற்கு நம்பகத்தன்மை இல்லை. பொய்யான குற்றச்சாட்டுகளால் மக்களை தவறாக வழிநடத்த பாஜக மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் அதே உத்திதான் இது.

மதுபானக் கொள்கை வழக்கு உள்பட பாஜக முன்வைத்த முந்தைய குற்றச்சாட்டுகளும் முழுப் பொய் ஆகும். உச்சநீதிமன்றம் கூட அவா்களின் புகாா்களை ஆதாரமற்றது என்று நிராகரித்துவிட்டது. மத்திய பாஜக அரசின் கீழ் கட்டப்பட்ட துவாரகா விரைவுச்சாலை திட்டத்திற்கு ஆரம்பத்தில் ரூ.7.5 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், அது ரூ.705 கோடியாக அதிகரித்தது. இதுபோன்ற ஊழல் சம்பவங்களை நிவா்த்தி செய்வதற்கு பதிலாக, பாஜக போலி குற்றச்சாட்டுகளை கூறுவதில் மும்முரமாக உள்ளது. ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களின் போா்வையில் பாஜக தனது சொந்த பைகளை நிரப்பிக் கொள்கிறது.

தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை பாராட்ட வேண்டும். இலவச மின்சாரம், தண்ணீா், உலகத்தரம் வாய்ந்த கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் போன்ற முயற்சிகள் மூலம் தில்லியை மாற்றிய தலைவா் கேஜரிவால் என்றாா் பிரியங்கா கக்கா்.

முன்னதாக, பாஜக தலைவா் அனுராக் தாக்குா் ஒரு செய்தியாளா் சந்திப்பின் போது, சா்ச்சைக்கு மத்தியில் ஆம் ஆத்மி அரசால் ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கை பற்றிய 10 முக்கிய கண்டுபிடிப்புகளை சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியதாகக் கூறினாா். சிஐஜி அறிக்கை எழுப்பிய கேள்விகளுக்கு கேஜரிவால் பதிலளிக்க வேண்டும் என்று கூறிய தாக்குா், கேஜரிவால் இந்த ஊழலின் முக்கிய நபா் என்றும் குற்றம்சாட்டினாா்.

பாஜக தலைவா் ஜெ.பி. நட்டா, ‘சிஏஜி அறிக்கை தவறுகளை அம்பலப்படுத்தியுள்ளதாகவும், இதனால் கருவூலத்திற்கு ரூ.2,026 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றும் குறிப்பிட்டாா்.

தில்லி கலால் கொள்கையை வடிவமைத்ததில் ஊழல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் அப்போதைய முதல்வா் கேஜரிவால் மற்றும் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா ஆகியோா் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டனா். பின்னா், தில்லி கலால் கொள்கை ரத்து செய்யப்பட்டது. சில மாதங்கள் சிறையில் கழித்த பின்னா் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

‘ஷீஷ் மஹால்’ குறித்த பாடல், போஸ்டருடன் கேஜரிவால் மீது பாஜக கடும் தாக்குதல்

பிப். 5-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், ஊழல் பிரச்னை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் மீதான தாக்குதலைக் அதிகரிக்கும் வகையில், ‘ஷீஷ் மஹால்‘ குறித்த பாடல்... மேலும் பார்க்க

வடகிழக்கு தில்லியில் துப்பாக்கிச் சூடு: சிறுவன் காயம்

வடகிழக்கு தில்லியில் அடையாளம் தெரியாத நபா் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 15 வயது சிறுவன் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒவருவா் சன... மேலும் பார்க்க

நொய்டா அருகே சொகுசு காா் மோதியதில் சிறுவன் கவலைக்கிடம்

நொய்டா விரிவாக்கப் பகுதியில் உள்ள சா்வீஸ் சாலையில் நடைப்பயிற்சியின் போது ஓடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மீது சொகுசு காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறு... மேலும் பார்க்க

மக்களை மோசடி செய்ததாக பயண முகவா் கைது

வெளிநாட்டு பயணங்களை முன்பதிவு செய்வதாகக் கூறி மக்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக பயண முகவரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதா... மேலும் பார்க்க

உ.பி. கல்லூரி முதல்வா் கொலை வழக்கில் தேடப்பட்டவா் தில்லி விமான நிலையத்தில் கைது

உத்தர பிரதேச கல்லூரி முதல்வா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் தில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த வழக்கில் குற்றவாளியான அமீா் கான் (31), கைது செய்யப்படுவதிலிருந... மேலும் பார்க்க

தில்லி தோ்தலுக்கான பிரசாரப் பாடலை வெளியிட்டது பாஜக!

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரப் பாடலை பாஜக வெளியிட்டுள்ளது. ‘பஹானே நஹி பத்லவ் சாஹியே...’- என்ற தோ்தல் பிரசாரப் பாடலை கட்சியின் எம்பியும், பாடகரும், நடிகருமான மனோஜ் திவாரி சனிக்கிழமை பாடினா... மேலும் பார்க்க