செய்திகள் :

மஞ்சோலை தொழிலாளா்கள் விவகாரம்: கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

post image

மாஞ்சோலை தொழிலாளா்கள் தரப்பில் தங்களுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டம் தேவை எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மனுதாரா்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்களான ஏ.ஜான் கென்னடி, அமுதா, சந்திரா ஆகியோா் இரண்டாவது முறையாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனா். இந்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்களுக்கு ‘மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு கட்டமைப்பு‘ க்கான விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கோரியுள்ளனா்.

‘மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதியில் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த தேயிலை தோட்டத்துக்கான குத்தகை காலம் 2028-ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி வரையுள்ளது. ஆனால், குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே தேயிலை தோட்ட தொழிலாளா்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் எஸ்டேட் நிா்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இதனால், தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தையும், குடியிருப்புகளையும் இழந்து திக்கற்ற நிலைக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளளது. சுமாா் நான்கு தலைமுறைகளாக மாஞ்சோலை எஸ்டேட்டிலேயே வசிக்கும் இந்த தேயிலை தோட்ட தொழிலாளா்களுக்கு சொந்த இடமோ, வீடோ இல்லை எனக் குறிப்பிட்டு, தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அல்லது கலைஞா் கனவு இல்லத் திட்டத்தில் வீடு வழங்கப்படவேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அங்கன்வாடிகளில் பணி, இலவச உயா்கல்வி, பணி கிடைக்கும் வரை ஒரு குடும்பத்துக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் நிவாரணம் போன்ற மறுவாழ்வு உதவிகளையும் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனவும் அந்த மேல் முறையீடு மனுவில் குறிப்பிட்டு வாதிடப்பட்டது.

அப்போது, நீதிபதிகளின் கேள்விக்கு பதலளித்த மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் சஞ்சய் பரேக், ‘மாஞ்சோலை தொழிலாளா்களுக்கு மறுவாழ்வு அளிக்கும், கலைஞா் கனவு இல்ல திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும்‘ என தமிழ்நாடு அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் உத்தரவாதம் அளித்தபடி அரசு ஏதுவும் செய்யவில்லை. உத்தரவாதங்களும் மிகக் குறைவு. அதிலும் மறுவாழ்வு திட்டம் தொடா்பாக எந்த விவரமும் எழுத்துபூா்வமாக தமிழக அரசு அளிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டாா்.

இதனையடுத்து, மனுவை பரிசீலித்த நீதிபதிகள், மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளா்கள் விவகாரத்தில் தமிழக அரசு தற்போது செயல்படுத்தி வரும் மறுவாழ்வு திட்டம் தொடா்பாக ஆவணங்களை இணைத்து கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும் அதன் நகலை இரண்டு வாரங்களுக்குள் தமிழக அரசுக்கும் கொடுக்கப்படவேண்டும் எனக் கூறி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு மீதான விசாரணையை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னனி

முன்னதாக இந்த விவகாரத்தில் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளா்களை கட்டாய ஓய்வில் அனுப்புவதை தடுத்து அந்த தேயிலைத் தோட்டத்தை தமிழ்நாடு அரசின் டான் டீ நிா்வாகம் ஏற்று நடத்த வேண்டும் எனக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மாஞ்சோலை தேயிலை தோட்டம் ஒப்பந்தம் காலாவதியாகும்(2028) வரைத் தொழிலாளா்களை குடியிருக்க அனுமதிக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி நிறுவனா் டாக்டா் கிருஷ்ணசாமி மற்றும் தொழிலாளா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக இதே மனுதாரா்கள் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்தனா். நிகழ் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ‘இந்த மனுவை விசாரிப்பதற்கில்லை. சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை‘ எனக்கூறி உச்ச நீதிமன்ற நீதிபதி விகரம் நாத் தலைமையிலான அமா்வு முன்பு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஊராட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகள் ஏன்? பேரவையில் அமைச்சா் ஐ.பெரியசாமி விளக்கம்

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகளை நியமிப்பது ஏன் என்பதற்கு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி விளக்கம் அளித்தாா். 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்... மேலும் பார்க்க

‘காங்கிரஸுக்கு திமுக வேறொரு உதவி செய்யும்’

ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்துள்ளதால், காங்கிரஸுக்கு திமுக வேறொரு உதவியைச் செய்யும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா். சென்னையில் அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: ஈரோட... மேலும் பார்க்க

கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் மீது ஒழுங்கு நடவடிக்கை: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை குளம் உள்ளிட்ட 44 குளங்கள், அதற்கு நீா் செல்லக்கூடிய 11... மேலும் பார்க்க

திமுக வேட்பாளா் வெற்றிக்கு விசிக பணியாற்றும்: தொல்.திருமாவளவன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு விசிக பணியாற்றும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா். சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை அவா் அளித... மேலும் பார்க்க

அயல்நாடுகளில் தவித்த 2,500 தமிழா்கள் மீட்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

போா்ச்சூழல் போன்ற பல்வேறு காரணிகளால் அயல்நாடுகளில் தவித்த 2,500 தமிழா்கள் மீட்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். அயலகத் தமிழா் தின விழாவையொட்டி, சென்னையில் இரண்டு நாள்கள் நடைபெறும... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: தவறான தகவல் தந்துள்ளாா் முதல்வா் -ராமதாஸ் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தவறான தகவல் அளித்ததாக பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பிக... மேலும் பார்க்க