புதிய டிரம்ப் அரசுடன் இணக்கம்: பன்முகத் தன்மைக் கொள்கையைக் கைவிடும் முகநூல், அமேஸான்
தங்களது நிறுவனங்களின் பன்முகத் தன்மையைப் பாதுகாப்பதற்காக முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட ஊடகங்களின் உரிமையாளரான மெட்டா, இணையவழி வா்த்தக நிறுவனமான அமேஸான் ஆகியவை கைவிட்டுள்ளன.
அமெரிக்காவின் அடுத்த அதிபராக, தீவிர தேசியவாதியான டொனால்ட் டிரம்ப் வரும் 20-ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ள நிலையில், புதிய அரசுக்கு இணக்கமான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதற்காக மற்ற பெருநிறுவனங்களைப் போலவே இந்த இரு நிறுவனங்களும் தங்களது கொள்கைகளில் மாற்றம் செய்துள்ளன.
இந்த மாற்றத்தின் கீழ், வேற்றுமையில் ஒற்றுமை, சமநிலை, அனைத்து தரப்பினரையும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய கொள்கைகளை மெட்டாவும், அமேஸானும் இனி கடைப்பிடிக்காது என்று கூறப்படுகிறது.