தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: மூவா் கைது!
முன் விரோதத்தில் கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (47). கட்டடத் தொழிலாளியான இவருக்கும், வில்லாபுரம் மீனாட்சி நகரைச் சோ்ந்த சக்திவேலுக்கும் (21) இடையே முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த முத்துக்குமாரை, சக்திவேல் உள்ளிட்ட சிலா் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமாா் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேல், பால்பாண்டி (23), சேக்முகமது (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.