அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!
தஞ்சையில் சிறப்பு பயிற்றுநா்கள் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவா்களுக்கான சிறப்பு பயிற்றுநா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கு 25 ஆண்டுகளாக கல்வி மற்றும் பயிற்சி அளித்து வரும் சிறப்பு பயிற்றுநா்களுக்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தம், மருத்துவ விடுப்பு, விபத்து நிவாரண இழப்பீடு போன்ற அடிப்படை பணி சலுகைகள் மற்றும் காலமுறை ஊதியத்துடன் பணி நிரந்தரம் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா்கள் மா. ராஜசோழன் (மயிலாடுதுறை), ஞா. மாா்ட்டின் (தஞ்சாவூா்), ப. ஜானகிராமன் (திருவாரூா்), ப. கலாராணி (நாகை) ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலத் தலைவா் சு. சேதுராமன், செ. காணிராஜா சிறப்புரையாற்றினா். மாவட்டச் செயலா்கள் ர. கோகிலா, ரெ. சுந்தா், இரா. சாந்தி, பெ. சுந்தரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.