செய்திகள் :

'6 மாதங்களாக ஃபிரிட்ஜில் இளம்பெண் சடலம்' - லிவ் இன் பார்ட்னரை கொன்ற நபர்!

post image

மத்திய பிரதேசம் திவாஸ் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் படிதார். இவரது வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து போலீஸார் செய்த சோதனையில் வீட்டிற்குள் கிட்டதட்ட 6 மாதமாக ஃபிரிட்ஜில் பெண் ஒருவரின் சடலம் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

PTI அறிக்கையின் படி, கொலை செய்யப்பட்டப் பெண் புடவை மற்றும் நகைகள் அணிந்திருக்கக்கூடும் என்றும், அவரது கைகள் கழுத்தோடு இணைத்து கட்டப்பட்டிருக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது. இந்தக் கொலை குறித்து போலீஸார் ''இந்தக் கொலை ஒரு வருடத்திற்கு முன்பே நடந்திருக்கலாம்" என்று கூறுகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண் சஞ்சய் படிதருடன் 5 வருடங்களாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காதலர் தினம்

இந்த வீட்டில் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் குடியேறியுள்ளார் சஞ்சய். அதன் பின்னர், 15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டை காலி செய்வது, மீண்டும் குடியேறுவது என இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு, அந்த வீட்டின் ஒரு அறையை காலி செய்துவிட்டு, மீதம் இருக்கும் இரண்டு அறைகளில் அவரது பொருட்களை வைத்துள்ளார். இந்த அறைகளையும் விரைவில் காலி செய்யப்போவதாக சஞ்சய் சமீபத்தில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, இன்னொருவருக்கு அந்த வீட்டினை வாடகைக்கு விட்டுள்ளார் வீட்டின் உரிமையாளர். அப்போது தான் துர்நாற்றம் வீசி கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தக் கொலை குறித்து விசாரணைகள் போய் கொண்டிருக்கிறது.

தேனி: காவல் நிலையத்தில் கொள்ளை முயற்சி... பரபரத்த போலீஸ்; இருவர் கைது! - நடந்தது என்ன?

தேனி பெரியகுளம் ரோட்டில் ஈஸ்வர் நகரில் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல் நிலையம் உள்ளது. நேற்று நள்ளிரவு காவல் நிலையத்தில் இருந்து பலத்த சத்தம் கேட்டிருக்கிறது. அருகில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தக... மேலும் பார்க்க

தொடரும் மீனவர் சிறை பிடிப்பு... ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை 2 படகுகளுடன் கைதுசெய்த இலங்கை கடற்படை!

பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிக்க செல்லும் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது பல ஆண்டு காலமாக தொடர்கிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 569 மீனவர்கள் கைதுசெய்... மேலும் பார்க்க

மதுரை: கோயிலுக்கு வந்த சிறுமி பாலியல் வதை செய்யப்பட்ட கொடூரம்; போலீஸ் எஸ்.எஸ்.ஐ கைது - என்ன நடந்தது?

மதுரை மாவட்டத்தில் கோயிலுக்கு சென்ற 14 வயது சிறுமியை போலீஸ் எஸ்.எஸ்.ஐ ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்து கைதாகியுள்ள சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போக்சோ வழக்குசென்னை அண்ணா பல்க... மேலும் பார்க்க

பாஜக Ex.MLA வீட்டில் IT ரெய்டு; முதலைகளைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி... வனத்துறை வழக்குப்பதிவு!

வருமான வரித்துறையினர் சோதனைக்கு சென்ற இடத்தில் முதலைகள் மற்றும் பிற ஊர்வனவற்றை செல்லபிராணியாக வளர்ப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.மத்திய பிரதேசம் மாநிலம், சாகர் மாவட்டத்தில் வசிக்கிறார் முன்னாள் ... மேலும் பார்க்க

`5 ஆண்டுகளாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப்' -8 மாதங்கள் ஃபிரிட்ஜில் இருந்த பெண்ணின் உடல்... பகீர் பின்னணி

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் தம்பதிகள் இடையே தகராறு ஏற்படும் போது அது வன்முறையில் முடிந்து விடுகிறது. ஏற்கெனவே இரண்டு ஆண்டுக்கு முன்பு டெல்லியில் அது போன்று லிவ் இன் முறையில் வாழ்ந்த ஸ்ரத... மேலும் பார்க்க

நண்பர்களுக்கு வீடியோ காட்டிய காதலன்; 5 ஆண்டுகளில் மாணவியை வன்கொடுமை செய்த 62 பேர் - கேரளா அதிர்ச்சி

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பான குடும்பஸ்ரீ அமைப்பின் சினேகித ஜென்டர் ஹெல்ப் டெஸ்க் மூலம் தனக்கு நேர்ந்த பா... மேலும் பார்க்க