மணிப்பூரில் 2 மாவட்டங்களில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் மீட்பு
பாஜக ஆட்சி வந்தால் குடிசைப்பகுதிகளை அழித்து விடுவர்: கேஜரிவால்
தில்லியில் பாஜக ஆட்சி வந்தால், குடிசைப்பகுதி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி விடுவர் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கூறினார்.
தில்லியில் ஷாகுர் பஸ்தி பகுதியில் செய்தியாளர்களுடன் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது, ``பாஜகவினர் குடிசைப்பகுதி மக்களின் வாக்குகளைத்தான் முதலில் விரும்புவர்; தேர்தலுக்கு பின்னர், உங்களின் நிலத்தைத்தான் அவர்கள் விரும்புவர்.
குடிசைப்பகுதி மக்களின் நலனைவிட, அவர்களின் நிலத்தைக் கையகப்படுத்துவதில்தான் பாஜக முன்னுரிமை அளிப்பர். வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி வந்தால், அனைத்து சேரிகளையும் அழித்து விடுவர்.
இதையும் படிக்க:பெரியார் ஆரியத் தலைமையுடன் நட்புடன் இருந்தார்: சீமான்
குடிசைப்பகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல், அவர்களின் நிலங்களைக் கையகப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், அவர்கள் குடிசைப்பகுதிவாசிகளுக்காக 4,700 குடியிருப்புகளை மட்டுமே கட்டியுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
தில்லியில் 2013, 2015, 2020 சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து, வரவிருக்கும் 2026 தேர்தலிலும் 4-ஆவது முறையாக வெற்றிபெற ஆம் ஆத்மி கட்சியினர் முயற்சி செய்கின்றனர். தில்லியில் பிப்ரவரி 5 ஆம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு, பிப்ரவரி 8 ஆம் தேதியில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.