தில்லி தேர்தல்: வாக்காளர்கள் நன்கொடை அளிக்கும் பிரசாரம் தொடக்கம்
இழிவாகப் பேசியதாக சமூக ஆர்வலர் மீது நடிகை ஹனி ரோஸ் வழக்குப்பதிவு!
நடிகை ஹனி ரோஸ் குறித்து இழிவான கருத்துகளை சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர் கூறியதாக, அவர் மீது ஹனி ரோஸ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர் மீது எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்த ஹனி ரோஸ் கூறியதாவது, ``என்னையும் என் தொழிலையும் குறிவைத்து மோசமான, இரட்டை அர்த்தமுடைய அவமானகரமான கருத்துகள் உள்பட சமூக ஊடகங்கள் மூலம் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு ராகுல் ஈஸ்வர் முக்கிய காரணம். அவரது செயல்கள் தொடர்ந்து கடுமையான மன வேதனைக்கு என்னை ஆளாக்கியுள்ளன. மேலும் தற்கொலை எண்ணங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
இவ்வாறான செயல்கள், ஒரு பெண்ணாக எனது கண்ணியத்தைக் களங்கப்படுத்த வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட முயற்சிகள். ராகுல் ஈஸ்வர் நேரடியாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் தீங்கு விளைவித்ததுடன், எனது பெண்மையை அவமதிப்பதாகவும் பலமுறை அச்சுறுத்தியுள்ளார். எனது தொழில்முறை வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உள்படுத்தவும் அவர் முயற்சித்துள்ளார்.
நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம். அதற்கு நீங்களும் ராகுல் ஈஸ்வர் ஒரு முக்கிய காரணம். அவரது நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் தொழிலதிபர் போபி செம்மனூர் மீது ஹனி ரோஸ் பாலியல் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. ஹனி ரோஸின் புகாரையடுத்து, போபி செம்மனூர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிக்க:சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!