செய்திகள் :

குடும்பஸ்தன் வெளியீட்டுத் தேதி!

post image

நடிகர் மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கே. மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக  நடித்து வெற்றி பெற்றார்.

அதன் வெற்றிக்குப் பிறகு அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதையும் படிக்க: காலில் காயம்! ராஷ்மிகாவால் படப்பிடிப்புகள் பாதிப்பு!

சினிமாகாரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

வித்தியாசமான கதைகளைத் தேடும் நடிகரான மணிகண்டன் இப்படத்திலும் கவனம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்படம் ஜன. 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் 8: பழைய போட்டியாளர்களுக்கு விஜய் சேதுபதி கொடுத்த பதில்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பழைய போட்டியாளர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி தக்க பதிலடி கொடுத்துள்ளார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13 வாரங்களை நிறைவு செய்துள்ளது. நிகழ்ச்சி முடிய இன்... மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் வெற்றி... துள்ளிக்குதித்த அஜித்!

நடிகர் அஜித் குமாரின் அணி கார் பந்தயத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.துபையில் நடைபெற்று வரும் 24H சீரிஸ் கார் பந்தயத்தில் இந்தியாவிலிருந்து அஜித் குமார் ரேசிங் என்கிற பெயரில் நடிகர் அஜித் குமார் தன... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: முத்துக்குமரனை விமர்சித்த விஜய் சேதுபதி!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முத்துக்குமரனை நடிகர் விஜய் சேதுபதி விமர்சிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13 வாரங்களை நிறைவு செய்துள்ளது. அடுத்த வாரத... மேலும் பார்க்க

சசிகுமார் - ராஜு முருகன் படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் ராஜு முருகன் இயக்கிவந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் ராஜு முருகன் இயக்கிய ஜப்பான் திரைப்படம் தோல்விப்படமானதைத் தொடர்ந்து, நடிகர் சசிகுமாரை வைத்து... மேலும் பார்க்க

தொலைக்காட்சிகளில் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்!

பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் திருநாள் இருநாள்களிலும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி சேனல்களில் காலை முதல் இரவுவரையில் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்படவுள்ளன.ஜீ தமிழ்ஜீ தமிழ் தொலைக்காட... மேலும் பார்க்க

பிசிசிஐ புதிய செயலாளர் யார்?

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக தேவஜித் சைக்கியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்... மேலும் பார்க்க