பிக் பாஸ் 8: முத்துக்குமரனை விமர்சித்த விஜய் சேதுபதி!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முத்துக்குமரனை நடிகர் விஜய் சேதுபதி விமர்சிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13 வாரங்களை நிறைவு செய்துள்ளது. அடுத்த வாரத்துடன் பிக் பாஸ் நிறைவடையவுள்ளதால், நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ரயான் நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். இதனால் எஞ்சிய 7 போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்குள் நுழைய கடுமையாக உழைத்தனர்.
இதனிடையே நிகழ்ச்சியை மேலும் சுவாரசியமாக்கும் வகையிலும் போட்டியைக் கடினமாக்கும் வகையிலும், முன்னாள் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.
போட்டிகளின் முடிவில் முன்னாள் போட்டியாளர்களில் இருவர் எஞ்சியுள்ள போட்டியாளர்களுக்கு மாற்றாக அமைவார்கள் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், வார இறுதிநாளில் வீட்டில் உள்ள போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவது வழக்கம். அந்தவகையில் உங்களிடம் இருக்கும் எந்தவொரு விஷயத்தை போகியில் எரிக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார்.
இதில், என்னை பற்றி ஓவர் விளக்கம் கொடுக்கிறேன் என்று இருக்கு, அதனை தீயில் இட்டு எரிக்க வேண்டும் என்றார் ஜாக்குலின். முன்கோபத்தை தூக்கிப் போட்டு எரிக்க வேண்டுமென நினைக்கிறேன் என்றார் தீபக். கூச்சத்தை எரிக்க விரும்புவதாக கூறினார் ரயான்.
பிக் பாஸில் இத்தனை நாள்கள் இருந்திருக்கிறேன். இதில் இந்த நினைவை மட்டும் வேண்டாம் என நீங்கள் நினைப்பது என விஜய் சேதுபதி கேட்டதும், ராணவ் கீழே விழுந்தபோது அவன் நடிக்கிறான் நடிக்கிறான் என கத்தினேன். அந்த மாதிரி சொல்லியிருக்க வேண்டாம் என்றார் செளந்தர்யா.
நான் கேப்டனாக இருக்கும்போது கோபப்பட்டது சார் என்றார் முத்துக்குமரன். பதவி, அதிகாரம் வரும்போது நான் யார் தெரியுமா? என்று ஒரு எண்ணம் தோன்றியதல்லவா? அது தானே எரிக்க வேண்டியது, இல்லையா? என விஜய் சேதுபதி கேட்டதும் சிரித்தபடியே நின்றார் முத்துக்குமரனிடம் கேட்டார்.
இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாகவே முத்துக்குமரனின் பேச்சில் இருக்கும் பிழைகளை விஜய் சேதுபதி அதிகம் சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பிக் பாஸ் 8: இந்த வாரம் எதிர்பாராத 2 பேர் வெளியேற்றம்!