ரவீந்திர ஜடேஜா இடத்தை நிரப்ப அக்ஷர் படேல் தயார்: ஹர்பஜன் சிங்
ரவீந்திர ஜடேஜா இடத்தை நிரப்புவதற்கு அக்ஷர் படேல் தயாராக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும் சாம்பியன்ஸ் டிராபிக்கான தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. இந்திய அணியும் விரைவில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை அறிவிக்கும் எனத் தெரிகிறது. இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிக்க: ஒருவர் சதம், மூவர் அரைசதம் விளாசல்; அயர்லாந்துக்கு 371 ரன்கள் இலக்கு!
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக வலம் வருபவர் ரவீந்திர ஜடேஜா. அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருப்பினும், அவர் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டரான அக்ஷர் படேல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அக்ஷர் படேலை தேர்வு செய்வேன்
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஷர் படேல் இருவரில் யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அவரது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
அவர் பேசியதாவது: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக அக்ஷர் படேலை தேர்வு செய்வேன். ரவீந்திர ஜடேஜா பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு அளித்து வந்த பங்களிப்பை வழங்க அக்ஷர் படேல் தயாராகிவிட்டதாக நினைக்கிறேன் என்றார்.