100-வது ஒருநாள் போட்டியில் அசத்திய தீப்தி சர்மா!
இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அவரது 100-வது ஒருநாள் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்காட்டில் இன்று (ஜனவரி 12) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையும் படிக்க: தோனியின் துணிச்சல் யாருக்கும் இல்லை! -யுவராஜ் சிங்கின் தந்தை சுவாரசியம்
100-வது போட்டியில் அசத்திய தீப்தி சர்மா
அயர்லாந்துக்கு எதிரான இன்றையப் போட்டி இந்திய வீராங்கனை தீப்தி சர்மா விளையாடிய 100-வது ஒருநாள் போட்டியாகும். இந்தப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இன்றையப் போட்டியில் 10 ஓவர்கள் வீசிய அவர் 37 ரன்களை விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதுவரை இந்திய அணிக்காக 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தீப்தி சர்மா 124 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.