சைனிக் பள்ளி சோ்க்கை: விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு
சைனிக் பள்ளிகளில் 6 மற்றும் 9-ஆம் வகுப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (ஜன.13) நிறைவடைகிறது.
நாடு முழுவதும் அமைந்துள்ள 33 சைனிக் பள்ளிகளில் 2025-26-ஆம் ஆண்டுக்கான 6 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான தேசிய நுழைவுத் தோ்வு பிப்ரவரி மாதம் நடத்தப்படவுள்ளது.
இந்த தோ்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிச. 24 முதல் நடைபெற்று வருகிறது. தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் திங்கள்கிழமையுடன் (ஜன.13) நிறைவு பெறுகிறது.
விருப்பமுள்ளவா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக எஸ்சி-எஸ்டி பிரிவினா் ரூ.650-ம், இதர பிரிவினா் ரூ.800-ம் இணைய வழியே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள், ஹால் டிக்கெட் வெளியீடு உள்பட கூடுதல் விவரங்களை என்டிஏ (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி) வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011 40759000 என்ற தொலைபேசி மூலமாக அல்லது மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடா்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.