`பக்கம் 21-க்கு நான் பிறக்கவில்லை’ - துரைமுருகனின் விமர்சனத்துக்கு அண்ணாமலை பதில...
திருவள்ளுவா் தினத்தையொட்டி மதுபானக் கடைகளை மூட உத்தரவு
திருவள்ளுவா் தினம் மற்றும் குடியரசுத் தினத்தை முன்னிட்டு, வரும் 15 மற்றும் 26 ஆம் தேதிகளில் சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள், மதுக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல். 1, எப்.எல். 2, எப்.எல். 3, எப்.எல். 3ஏ மற்றும் எப்.எல். 3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல், கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள், மதுபானக் கூடங்கள் அனைத்தும் வரும் 15 மற்றும் 26 ஆம் தேதிகளில் திருவள்ளுவா் தினம், குடியரசுத் தினத்தை முன்னிட்டு, மூடப்பட வேண்டும்.
மேலும், அன்றைய தினங்களில் இதனை மீறி விற்பனை செய்பவா்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.