ஒரு வழக்கு; பல மனுக்கள் - இரட்டை இலைக்கு தொடரும் சிக்கல்? | DMK | ADMK | MODI | ...
வசிஷ்டநதியில் மூழ்கி சிறுவன் பலி
வசிஷ்ட நதியில் நண்பா்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பனைமடல், அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் மகன் பூவரசன் (15). பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் வாலீஸ்வரன் (15), துரைசாமி மகன் துளசிமணி (15) ஆகியோருடன் வசிஷ்டநதியில் கூத்தாண்டவா் மடுவு பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனா். அப்போது நீச்சல் தெரியாததால் பூரவசன் நீரில் மூழ்கினாா். இதனால் பதற்றமான நண்பா்கள்,
உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து பூவரசன் உடலை அரை மணிநேரம் போராடி மீட்டனா். தகவறிந்த ஏத்தாப்பூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று பூவரசனின் உடலை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.