செய்திகள் :

`பக்கம் 21-க்கு நான் பிறக்கவில்லை’ - துரைமுருகனின் விமர்சனத்துக்கு அண்ணாமலை பதிலடி!

post image
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய கருத்துகளை பொதுவெளியில் பேசி வருகிறார்.

சீமான் கூறும் இந்தக் கருத்துகளில் உடன்படுவதாகவும், அதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பெரியார் தொடர்பான கருத்துகளை ஆதரித்து வருகிறார். தமிழக அரசியலில் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிற இந்த விவகாரம் குறித்து தி.மு.க-வின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் நேற்று இரவு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது காட்டமாக பேசியிருக்கிறார். ``பெரியார் பற்றி அவதூறு பேசுகிறவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன்’’ என்று ஒற்றை வார்த்தையில் சீமானையும், அண்ணாமலையையும் கடுமையாக தாக்கிப் பேசினார் துரைமுருகன்.

துரைமுருகன்

துரைமுருகனின் இந்த விமர்சனத்துக்கு கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து உடனடியாக பதிலடி கொடுத்திருக்கிறார் அண்ணாமலை. ``பெரியாருக்கும் நிகழ்கால தமிழகத்திற்கும், எவ்வித தொடர்பும் இல்லை. இவர்கள் எப்போதோ கட்டமைத்திருக்கின்ற ஒரு பிம்பத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். ஒரு பலூனை எவ்வளவு ஊதினாலும் ஒருநாள் அது உடையத்தான் போகிறது.

`முரசொலி’ 1962 பொங்கல் மலரில், `பெரியாரை கேளுங்க?’ என்று ஒரு கார்ட்டூன் வெளியாகியுள்ளது. அதை படித்தால் அருவருப்பாகிவிடும்; ஆபாசமாக போய்விடும். சீமான் பேசியிருக்கிறார். நாங்கள் பேச விரும்பவில்லை. பெரியாரை பற்றிய எங்கள் பார்வை, சிந்தனை மாறவில்லை. தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வரும்போது இந்து அறநிலையத்துறை இருக்காது. கோயிலுக்கு வெளியே ஆபாசமாக என்ன பொறித்து வைத்திருக்கிறார்களோ, அது அகற்றப்படும்.

அண்ணாமலை

நான் பெரியாரை பற்றிப் பேசுவதால் என் பிறப்பை பற்றியும் சந்தேகப்படுகிறார் துரைமுருகன். அவருக்கு நான் பதில் சொல்ல வேண்டும். நான் ஒரே அப்பா, அம்மாவுக்குத்தான் பிறந்தேன். விவசாயம் செய்கிற குடும்பத்தில்தான் பிறந்தேன். அதிலும் மாற்றுக் கருத்து இல்லை. கிராமத்தில்தான் பிறந்தேன். அதிலும் சந்தேகம் இல்லை. இதுவரை ஊழல் எதிலும் செய்ததில்லை. அதிலும் சந்தேகமில்லை. அமலாக்கத்துறையினர் என் வீட்டுக்கு கடப்பாரை எடுத்துக்கொண்டு வந்து ரெய்டு செய்யவில்லை. ரெய்டு அடிக்கும்போது, பையன் துபாயில்போய் உட்கார்ந்திருக்கும் அளவுக்கான ஒரு பையனை நான் பெற்றெடுக்கவில்லை. அதிலும் எனக்குச் சந்தேகமில்லை. அதெல்லாம் தாண்டி பக்கம் 21-க்கு நான் பிறக்கவில்லை. எங்கள் பிறப்பு நல்ல பிறப்புதான்’’ என்றார் காட்டமாக.

'திராவிட மாடல் அரசு காரணம் என்றால் காரி துப்புவேன்' - அஜித் விவகாரத்தில் அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜக மிகவும் அரிதாகத்தான் தேர்தல் புறக்கணிப்பு செய்யும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்படி ந... மேலும் பார்க்க

ஒரு வழக்கு; பல மனுக்கள் - இரட்டை இலைக்கு தொடரும் சிக்கல்? | DMK | ADMK | MODI | Imperfect show

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - "இதுவரை, ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி!" - ஸ்டாலின்* - பொள்ளாச்சி சம்பவம் குறித்து யார் உண்மையைச் சொன்னார்கள்? - சட்டமன்றத்தில் மோதல்!* - பாலியல் குற்றவாளிகளுக்கு மரண ... மேலும் பார்க்க

`1978-ல் சரத் பவார் தொடங்கிய துரோகத்திற்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது!' - அமித் ஷா பேச்சு

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி படுதோல்வியை சந்தித்தது. இத்தோல்வியால் எதிர்க்... மேலும் பார்க்க

இந்தியாவில் பெண்களுக்கான திட்டங்களும், அதிகரித்த வாக்காளர் எண்ணிக்கையும் - ஆய்வறிக்கை சொல்வதென்ன?

அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் ஒரு பெரிய சக்தியாக செயல்படுகின்றன.குறிப்பாக, பெண்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சமூக நலத்திட்டங்கள் இந்தியாவின் அரசியல் அமைப்... மேலும் பார்க்க