இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன்: நாதன் மெக்ஸ்வீனி
பெங்களூருவில் பசுக்களின் மடிகளை துண்டித்த நபர் கைது
பெங்களூருவில் 3 பசுக்களின் மடிகளை துண்டித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காட்டன்பேட்டை போலீஸார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட சையத் நஸ்ரு, சாமராஜ்பேட்டை விநாயகநகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மாடுகளின் மடிகளை வெட்டியுள்ளார்.
குற்றத்தை செய்யும் போது நஸ்ரு போதையில் இருந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யாவிட்டால் கருப்பு சங்கராந்தி கடைபிடிக்கப்படும் என்று பாஜகவினர் அறிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திற்குச் சென்ற கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர் அசோகா, இது 'ஜிகாதி மனநிலை' என்று கூறினார்.
நடிகர் அஜித் குமாருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
பாஜக தலைவர் ரவிக்குமார், அரசு விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், உரிமையாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே சம்பவம் குறித்து அறிந்ததும் விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர் தயானந்தாவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.