சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!
ஜம்மு-காஷ்மீர்: எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் வீரர் காயம்
ஜம்மு-காஷ்மீரில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் வழக்கமான ரோந்துப் பணியில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவரது சர்வீஸ் துப்பாக்கி எதிர்பாராத விதமாக சுட்டது. இந்த சம்பவத்தில் அந்த வீரர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெங்களூருவில் பசுக்களின் மடிகளை துண்டித்த நபர் கைது
காயமடைந்த வீரர் மணீஷ் மேக்வால் என்றும் உடனடியாக அவர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் மேலும் கூறினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.