``எனக்குத் தெரியாமல் காவலர்களுக்கு பணி'' -உள்துறை செயலருக்கு இன்ஸ்பெக்டர் அனுப்ப...
கேரளம்: சுயேச்சை எம்எல்ஏ அன்வர் ராஜிநாமா!
கேரளத்தில் சுயேச்சை எம்எல்ஏ அன்வர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளும் இடசாரி ஜனநாயக முன்னணியிலிருந்து பிரிந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பி.வி.அன்வர் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதையடுத்து அவைத் தலைவர் ஷம்சீரை நேரில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
அன்வர் ராஜிநாமாவைத் தொடர்ந்து நீலம்பூர் தொகுதி காலியாகிறது. அந்த தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அந்தத் தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஐனநாயக முன்னணிக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 2016 மற்றும் 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் நீலம்பூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார் அன்வர். ஆளும் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதால் அவருடனான உறவை முறித்துக்கொண்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக அன்வர் பொறுப்பேற்றுள்ளார்.