செய்திகள் :

கோவை புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடித்த பிரச்னை; இளைஞர் கொலையில் திடுக் தகவல் - 7 பேர் கைது

post image

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் இன்பரசு. பிளம்பராக பணியாற்றி வந்தார். இவரை கடந்த வாரம் ஒரு கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்தது.

கோவை

இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகள் தேடப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி அருகே கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறைருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் சுபாஷ், ஆகாஷ்குமார், நாகராஜ் , மோகன் பிரசாத், நிஷாந்த் ,கௌதம் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இன்பரசு

அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள், இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

காவல்துறையினர் அவர்களை பிடித்தபோது ஆகாஷ் குமார் மற்றும் சுபாஷ் ஆகிய இருவர் தப்பி செல்ல முயற்சித்தனர். அப்போது தவறி விழுந்ததில் இருவருக்கும் கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டது. கைதானவர்களில் ஒரு சிறுவன் சீர்திருத்தப் பள்ளியிலும் மற்றவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிய விவகாரத்தில் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

``எனக்குத் தெரியாமல் காவலர்களுக்கு பணி'' -உள்துறை செயலருக்கு இன்ஸ்பெக்டர் அனுப்பிய புகாரால் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சரவணன். கடந்த 5 மாதங்களுக்கு முன் தேனி மாவட்டம் போடியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புகாரின் அடிப்படையில் மாறுதல் ச... மேலும் பார்க்க

278 சவரன் திருட்டு; 4 மாதங்களுக்குப் பிறகு சிக்கிய `மங்கி குல்லா’ கொள்ளையன் - தூக்கிட்ட தாயார்

278 சவரன் தங்க நகை கொள்ளை!நெல்லை அருகேயுள்ள மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ரெமன். இவர், அதே ஊரிலுள்ள கடைத் தெருவிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் முதல் மாடியில் பாத்திரக் கடையுடன் கூடிய தங்க நகை அட... மேலும் பார்க்க

QR Scam : `உஷார்...' - மாற்றப்பட்ட QR Code; குறிவைக்கப்பட்ட கடைக்காரர்கள்! - ம.பி-யில் என்ன நடந்தது?

டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. நகரத்தில் பெரும்பாலானவர்கள் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்துவருகின்றனர். அதே நேரம் அந... மேலும் பார்க்க

ரௌடியை தேடிச் சென்ற தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு - சங்கரன்கோவிலில் பரபரப்பு!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே தலைமை காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு ரௌடி ஒருவர் தப்பி ஓடியுள்ளார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நாம் போலீஸிடம் கேட்டோம... மேலும் பார்க்க

தங்கையை காதலித்தவரை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்... சிவகாசியில் பரபரப்பு!

சிவகாசியில், தங்கையை காதலித்த நபரை அண்ணன் குத்தி கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சிவகாசி சுற்றுவட்டாரத்தைச் ச... மேலும் பார்க்க

வசூல்ராஜா MBBS பட பாணியில் தேர்வில் மோசடி... போலீஸ் தேர்வில் சிக்கிய இளைஞர்!

மும்பையில் போலீஸ் தேர்வுக்கு எழுத்து தேர்வு நடந்தது. இத்தேர்வில் மகாராஷ்டிரா முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் வந்து கலந்து கொண்டனர். மும்பை ஓசிவாரா என்ற இடத்தில் நடந்த தேர்வில் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்த... மேலும் பார்க்க