ஆஸி. ஓபன்: இந்திய வம்சாவளி இளம் வீரருக்கு ஜோகோவிச் பாராட்டு!
வியக்க வைக்கும் தக் லைஃப் வணிகம்!
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள தக் லைஃப் படத்தின் வெளியீட்டு உரிமங்கள் பெரிதாக வணிகம் செய்துள்ளன.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது.
நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: வாடிவாசல் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி?
கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்தாண்டு ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நிறுவனம் ரூ. 150 கோடிக்குப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தக் லைஃப் படத்தின் ஆந்திர வெளியீட்டு உரிமத்தை ரூ. 20 கோடிக்கும், கன்னட உரிமத்தை ரூ. 15 கோடிக்கும் பெறுவதற்கான பேச்சுவார்த்தை முடிவடையும் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவே, நடிகர் கமல்ஹாசன் நடித்த படங்களிலேயே பெரிய வணிகத்தை செய்துவரும் படமென்பது குறிப்பிடத்தக்கது.