செய்திகள் :

நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

post image

சிதம்பரம் ஶ்ரீநடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 'நடராஜா', 'சிவசிவா' என கோஷமிட்டு தரிசனத்தை கண்டுகளித்தனர்.

ஸ்ரீநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன உத்சவம் கடந்த ஜன.4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜன.12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. பின்னர் இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது. ஜன.13-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் ஶ்ரீநடராஜமூர்த்திக்கும், ஶ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவை குடகுடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 4.00 மணிக்கு தொடங்கிய மகாபிஷேகம் 9.00 மணிக்கு முடிவுற்றது. மகாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து தரிசித்தனர்.

பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீ நடராஜமூர்த்திக்கும், ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் நடைபெற்றன. சிதசபையில் உத்சவ ஆச்சாரியாரால் ரகசிஸ பூஜை நடத்தப்பட்டது. பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் மாலை 4.10 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர். பின்னர் சித்சபா பிரவேசம் நடைபெற்றது. தரிசனக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். ஜன.14-ம் தேதி செவ்வாய்க்கிழமை முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சி நடைபெறுகிறது. ஜன.15-ம் தேதி புதன்கிழமை 22 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரி புணரமைக்கப்பட்ட ஞானப்பிரகாசர் தெப்ப குளத்தில், தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. மார்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நான்கு கோபுரங்கள், ஆயிரங்கால் மண்டபம் மற்றும் கோயில் வளாகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

உத்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் உ.வெங்கடேச தீட்சிதர், துணைச்செயலாளர் து.ந.சுந்தரதாண்டவ தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் ச.க.சிவராஜ தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மேற்பார்வையில் சிதம்பரம் டிஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.ரமேஶ்பாபு மற்றும் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகரமன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் ஆணையின் பேரில் ஆணையாளர் டி. மல்லிகா செய்திருந்தார்.

படவிளக்கம்- சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானின் நடனத்தை காண திரண்ட பக்தர்கள்

வியக்க வைக்கும் தக் லைஃப் வணிகம்!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள தக் லைஃப் படத்தின் வெளியீட்டு உரிமங்கள் பெரிதாக வணிகம் செய்துள்ளன.கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்... மேலும் பார்க்க

வாடிவாசல் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி?

வாடிவாசல் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இணையலாம் என தகவல் வெளியாகியுள்ளது.கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்... மேலும் பார்க்க

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பெருசு!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி படம் அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து ரெட்ரோ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம், மே 1 ஆம் தேதி ... மேலும் பார்க்க

தனுஷ் கைவசம் இத்தனை படங்களா?

நடிகர் தனுஷ் அடுத்தடுத்த திரைப்படங்களைக் கைவசம் வைத்திருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.நடிகர் தனுஷ் ராயன் படத்தின் வெற்றிக்குப் பின் குபேரா, இட்லி கடை படங்களில் நடித்து வருகிறார். நிலவுக்கு என்மேல் என... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: கடைசி வாரத்தில் வெளியான காதல்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் பார்வையாளர்கள் ஐ லவ் யூ சொல்லிக்கொண்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13 வாரங்களை நிறைவு செய்து 14வது வாரத்தை... மேலும் பார்க்க

விரைவில் பிரபாஸ் திருமணம்! மணப்பெண் யார்?

நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமண நடைபெற உள்ள தகவல் உறுதியாகியுள்ளது.பாகுபலி, சலார் படங்களின் பிரம்மாண்ட வெற்றியால் இந்தியளவில் முன்னணி நடிகராக பிரபாஸ் மாறியுள்ளார். இவர் நடித்த கல்கி திரைப்படம் ரூ. ... மேலும் பார்க்க