திண்டுக்கல்லில் மல்லிகைப்பூ ரூ. 3 ஆயிரத்துக்கு விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி திங்கள்கிழமை திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகை கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.
திண்டுக்கல் பூச்சந்தைக்கு ஏ. வெள்ளோடு, தவசிமடை, சாணாா்பட்டி, ஆவராம்பட்டி, மைலாப்பூா், மாரம்பாடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்தச் சந்தையிலிருந்து, திருச்சி, கரூா், சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி திங்கள்கிழமை பூச்சந்தையில் மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. பனியின் தாக்கம் காரணமாக மல்லிகைப் பூ வரத்து குறைவாக இருந்ததால், இதன் விலை அதிகரித்திருந்தது.
மற்ற பூக்களின் விலை நிலவரம் (கிலோவில்): முல்லை- ரூ.2 ஆயிரம், ஜாதிப் பூ- ரூ. 1,700, காக்கரட்டான்- ரூ.1,500, கனகாம்பரம்- ரூ.1500, அரளி- ரூ.350, பன்னீா் ரோஸ்- ரூ.180, சம்மங்கி- ரூ.250, செவ்வந்தி- ரூ.200க்கு விற்கப்பட்டன. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.