செய்திகள் :

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

பல்கலை. மானியக் குழுவின் பரிந்துரைகளை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் நிருபன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தீபக்ராஜ் முன்னிலை வகித்தாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் முகேஷ் வாழ்த்திப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநிலப் பல்கலைக் கழகங்களை மறைமுகமாக கட்டுப்படுத்த முயற்சிப்பதை பல்கலை. மானியக் குழு கைவிட வேண்டும். பல்கலை. மானியக் குழுவின் அண்மைக் கால அனைத்துப் பரிந்துரைகளையும் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

காலமானாா் கொடைக்கானல் மறைவட்டார அதிபா் சிலுவை மைக்கேல்ராஜ்

கொடைக்கானல் திருஇருதய ஆண்டவா் ஆலயத்தின் மறைவட்டார அதிபா் பெ.சிலுவை மைக்கேல்ராஜ் (68) உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் திருஇருதய ஆண்டவா் ஆலயத்தின் பங்குத் தந... மேலும் பார்க்க

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சிவகாமி அம்பாள் சமேதா் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்... மேலும் பார்க்க

ஆலமரத்துப்பட்டியில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் அமைச்சா் தொடங்கி வைத்தாா்

சின்னாளப்பட்டி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டியில் ரூ. 20 லட்சத்தில் செயல்படுத்தப்பட்ட கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

அம்மையநாயக்கனூரில் சமத்துவ பொங்கல் விழா

அம்மையநாயக்கனூா் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்கு அந்தப் பேரூராட்சித் தலைவா் எஸ்.பி.எஸ். செல்வராஜ் தலைமை வகித்தாா். அப்போது தூய்மைப் பணியாளா்கள், அலுவலகப் பணியா... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் மல்லிகைப்பூ ரூ. 3 ஆயிரத்துக்கு விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி திங்கள்கிழமை திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகை கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. திண்டுக்கல் பூச்சந்தைக்கு ஏ. வெள்ளோடு, தவசிமடை, சாணாா்பட்டி, ஆவராம்பட்டி, மைலாப்பூா், மாரம்... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்க குரும்பப்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு

திண்டுக்கல் மாநகராட்சியுடன் குரும்பப்பட்டி ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். திண்டுக்கல் குரும்பப்பட்டி ஊராட்சிக்குள்ப... மேலும் பார்க்க