தமிழ்வழியில் படித்த வி. நாராயணன் இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்பு!
இஸ்ரோவின் தலைவராக வி. நாராயணன் பொறுப்பேற்றார்.
இஸ்ரோவின் 10-ஆவது தலைவராக இருந்து வந்த சோம்நாத்தின் பதவிக்காலம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்ததால், புதிய தலைவராக வி. நாராயணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்வழியில் படித்து, 1984-ல் இஸ்ரோவில் பணியைத் தொடங்கிய இவர், இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தின் (LPSC) இயக்குநராகவும், இந்தியாவின் லட்சிய மனித விண்வெளிப் பயணப் பயணமான ககன்யான் திட்டத்திற்கான தேசிய அளவிலான சான்றிதழ் வாரியத்தின் (HRCB) தலைவராகவும் முக்கியப் பங்கு வகித்தார்.
இதையும் படிக்க:மெட்டா பணியாளர்களுக்கு ரூ. 4 கோடியுடன் பணிநீக்கம்!
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி57, ஆதித்யா எல்1 உள்ளிட்ட திட்டங்களிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். இவர், இஸ்ரோ தலைவர் பதவியுடன், மத்திய அரசின் விண்வெளித்துறை செயலாளராகவும் பதவி வகிப்பார். நாராயணன் 2 ஆண்டுகளில் இந்தப் பதவிகளில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.