BB Tamil 8 : பணப்பெட்டியில் 2 லட்ச ரூபாய்; 45 மீட்டர்; 25 விநாடி - வீட்டுக்குள் ...
பாலமேடு ஜல்லிக்கட்டு: 7 வீரர்கள் தகுதி நீக்கம்!
பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாட்டுப் பொங்கல் திருநாளான இன்று (ஜன. 15) பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியானது 10 சுற்றுகளாக நடத்தப்படவுள்ளன.
பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் பாதுகாப்புப் பணிகளுக்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணிக்காக, மதுரை மட்டுமன்றி, தேனி, திண்டுக்கல், விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது!
பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்று நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
3 பேர் மது அருந்தியதாகவும் 3 பேர் எடைக் குறைவு என்ற காரணத்தாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.