பாலமேடு ஜல்லிக்கட்டு: 8 காளைகளை அடக்கி நத்தம் பார்த்தீபன் முதலிடம்!
திருக்குறள் தமிழ்க் கலாசாரம், பாரம்பரியத்தின் சாரத்தை பிரதிபலிக்கிறது! -பிரதமர் மோடி
திருக்குறள் தமிழ்க் கலாசாரம், பாரம்பரியத்தின் சாரத்தை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்க் கலாசாரத்தில் மிகவும் முன்னோடி புலவரும், உலகப் பொதுமறையான திருக்குறள் தந்தவருமான திருவள்ளுவரின் பிறந்த நாள், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டப்படுகிறது.
இதனையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அரசு அலுவலர்களும் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
1947-ல் சுதந்திரம் பெறவில்லை எனக் கூறுவது அவமதிக்கும் செயல்: மோகன் பாகவத்துக்கு ராகுல் பதிலடி!
திருவள்ளுவர் நாள் பற்றி பிரதமர் மோடியும் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “இன்று திருவள்ளுவர் தினத்தில் நமது நாட்டின் தலைசிறந்த தத்துவ ஞானி, புலவர், சிந்தனையாளர்களில் ஒருவரான திருவள்ளுவரை நினைவுகூர்வோம். அவர் எழுதிய திருக்குறள் தமிழ்க் கலாசாரம், பாரம்பரியத்தின் சாரத்தை பிரதிபலிக்கிறது.
அவருடைய கருத்துகள் நீதி மற்றும் போதனைகளை வலியுறுத்துகின்றன. அவரின் காலத்தால் அழியாத படைப்பான திருக்குறள் போதனைகளை வழங்கக்கூடிய உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது. நமது சமுதாயத்துக்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.