பிராட் பிட்டுடன் டேட்டிங்; ரூ.7 கோடி அவுட்; AI பயன்படுத்தி மோசடி!
பாலமேடு ஜல்லிக்கட்டு: 35 பேர் காயம்!
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியில் எட்டாவது சுற்று நடைபெற்றுவரும் நிலையில், இதுவரை 35 பேர் காயமடைந்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரிலும் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு நடைபெற்று முடிந்த நிலையில், இன்று பாலமேட்டில் ஜல்லிகட்டு போட்டி கோலாகமாக நடைபெறுகிறது
பாலமேடு ஜல்லிக்கட்டு ஏழு சுற்று நிறைவடைந்துள்ளது. ஜல்லிக்கட்டு 7-ஆம் சுற்றில் களம் கண்ட 83 மாடுகளில் 16 மாடுகள் பிடிபட்டன.
இந்த நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை 683 காளைகள் களம் கண்ட நிலையில் 125 காளைகள் பிடிபட்டன.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 7ஆம் சுற்று முடிந்து 8-ஆம் சுற்று விறுவிறுப்பாக நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை உயர் நீதிமன்ற நீதிபதி ஜீ.ஆர். சுவாமிநாதன் பார்வையிடுகிறார்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் உள்பட 35 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 17 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 10, பார்வையாளர்கள் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த 3 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.