செய்திகள் :

பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு: 1000 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

post image

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறும் நிலையில், ஜல்லிகட்டு நடைபெறும் பாலமேடு மஞ்சமலை ஆற்றுத் திடல் பகுதியில் அனைத்து முன்னேற்பாடு பணிகள் முடிவுற்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரிலும் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு நடைபெற்று முடிந்த நிலையில், இன்று பாலமேட்டில் ஜல்லிகட்டு போட்டி கோலாகமாக நடைபெறுகிறது

ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடங்கள், காளைகள் அவிழ்த்து விடும் இடம், காளைகள் வந்து செல்வதற்கான தடுப்புகள், காளைகள் சேகரிப்பு இடங்கள், போட்டி நடைபெறும் இருபுறமும் பாதுகாப்பு வேலி, என அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளும், குடி தண்ணீர், தற்காலிக கழிப்பறை, என்பன உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர ஜல்லிக்கட்டு போட்டிக்காக தென் மண்டல காவல் துறைத் தலைவர் தலைமையில் 2,400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் ஜல்லிகட்டில் பங்கேற்கும் மாடுபிடிவீரர்கள் மற்றும் காளைகளுக்கு தேவையான மருத்து வசதிகள், அவசரக் கால ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆன்லைன் மூலம் 4 ஆயிரத்து 820 காளைகளும், ஆயிரத்து 914 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ள நிலையில், போட்டியில் சுமார் 1000 காளைகளும் 900 மாடுபிடி வீரர்களும் களம் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரர்க்கு கார் ஆகியவை பரிசாக வழங்கப்படவுள்ளது இது தவிர நாட்டின கன்றுடன் பசு மாடு. இருசக்கர வாகனம், தங்கம் வெள்ளி காசுகள், சைக்கிள்,பீரோ, உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், சில்வர் பாத்திரங்கள் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

ஜல்லிகட்டு போட்டியைக் காண மதுரை மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பார்வையாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பாலமேட்டில் அதிகாலை முதல் குவிந்து வரும் நிலையில் பாலமேடு கிராமம் எங்கும் விழாக் கோலமாகக் காட்சி அளிக்கிறது.

பாலமேடு ஜல்லிக்கட்டு: 8 காளைகளை அடக்கி நத்தம் பார்த்தீபன் முதலிடம்!

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச்சுற்றில் 8 காளைகளை அடக்கி நத்தம் பார்த்தீபன் முதலிடம் பெற்றுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங... மேலும் பார்க்க

பாலமேடு ஜல்லிக்கட்டு: 35 பேர் காயம்!

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியில் எட்டாவது சுற்று நடைபெற்றுவரும் நிலையில், இதுவரை 35 பேர் காயமடைந்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல... மேலும் பார்க்க

பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு பதாகை!

பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வையாளர்கள் பதாகைகளைக் கொண்டு வந்துள்ளனர். மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்துக... மேலும் பார்க்க

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்!

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது.தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்... மேலும் பார்க்க

பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு

மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக தென் மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனா். ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி திருட்டு

அருப்புக்கோட்டையில் பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், எம். ரெட்டியபட்டியைச் சோ்ந்தவா் அழகா்சாம... மேலும் பார்க்க