முருங்கை பவுடர், கேப்சூல்,தேநீர்; லாபத்துக்கு வழிகாட்டும் முருங்கை சாகுபடி, மதிப...
பாலமேடு ஜல்லிக்கட்டு: 8 காளைகளை அடக்கி நத்தம் பார்த்தீபன் முதலிடம்!
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச்சுற்றில் 8 காளைகளை அடக்கி நத்தம் பார்த்தீபன் முதலிடம் பெற்றுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரிலும் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு நடைபெற்று முடிந்த நிலையில், இன்று பாலமேட்டில் ஜல்லிகட்டு போட்டி கோலாகமாக நடைபெறுகிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆன்லைன் மூலம் 4 ஆயிரத்து 820 காளைகளும், ஆயிரத்து 914 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ள நிலையில், போட்டியில் சுமார் 1000 காளைகளும் 900 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர்.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் ஆகியவை பரிசாக வழங்கப்படவுள்ளது இது தவிர நாட்டின கன்றுடன் பசு மாடு, இருசக்கர வாகனம், தங்கம் வெள்ளி காசுகள், சைக்கிள், பீரோ, உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள், சில்வர் பாத்திரங்கள் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்று வரும் நிலையில், 6 காளைகளை அடக்கி துளசி, கமல்ராஜ் இரண்டாம் இடத்தையும், பிரபா 5 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மேலும், பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை 683 காளைகள் களம் கண்ட நிலையில் 125 காளைகள் பிடிபட்டன. மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 5 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.