Meta : 'கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு' - மார்க் கருத்துக்கு இந்தியாவிடம் மன்னிப்பு ...
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை!
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள இரண்டு அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
சட்டவிரோத பணிபரிமாற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான இரண்டு அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருப்பது குறித்து அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.