செய்திகள் :

``அது தூத்துக்குடி அல்ல; தனுஷ்கோடி" -ரயில்வே விளக்கம்; மத்திய அரசை சாடும் சு.வெங்கடேசன்!

post image

மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தை தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் கைவிடப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரயில்வே

மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட மக்களும், தொழில்துறையினரும் நீண்டகாலமாக எதிர்பார்த்து, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி ரயில் பாதை திட்டம்.

தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் இத்திட்டம் கைவிடப்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்த தகவலால் மூன்று மாவட்ட மக்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். அது மட்டுமின்றி பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் திமுக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனைங்களை வைக்க ஆரம்பித்தனர்.

இது தவறான தகவல் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசுக்கு எதிராக வருகின்ற 20 ஆம் தேதி அருப்புக்கோட்டையில் போராட்டம் நடைபெறும் என்றும் அண்ணாமலை அறிவித்தார்.

இந்த நிலையில் ரயில்வே அமைச்சர் தெரிவித்தது 'தூத்துக்குடியை அல்ல, தனுஷ்கோடி ரயில் பாதைத் திட்டம்' என்று தெற்கு ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பாளர் அறிவிப்பு வெளியிடுள்ளார்.

அந்த அறிக்கையில், "கடந்த ஜனவரி 10 அன்று சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்கள் குறித்து தனித்தனியாக கேள்விகளை செய்தியாளர்கள் ஒரே நேரத்தில் கேட்டனர். இதனால் அதிக சத்தமும் குழப்பமும் நிலவியது.

அப்போது ஒரு செய்தியாளர், மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் பற்றி கேட்டார். ஒரே நேரத்தில் பல்வேறு குரல்கள் சத்தமாக கேட்டதால் தூத்துக்குடி என்பது அமைச்சர் காதில் தனுஷ்கோடி என்று பதிவானது. அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் நில ஆர்ஜிதம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனை காரணமாக ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்தை கைவிட கோரி கோரிக்கை வந்துள்ளதாக தெரிவித்தார்.

சு.வெங்கடேசன் - அஸ்வினி வைஷ்னவ்

ஒரே நேரத்தில் தனித்தனி திட்டங்கள் பற்றி பல்வேறு குரல்கள் சத்தமாக கேட்டதால், அமைச்சருடைய பதில் தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கானது என தவறான தகவல் பரிமாற்றம் ஆகிவிட்டது. மதுரை - தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்திற்கு எந்த விதமான நில ஆர்ஜிதப் பிரச்சனையும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சரின் பேச்சு குறித்து புதிய விளக்கம் அளித்து வெளியான அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மதுரை எம் பி சு.வெங்கடேசன், "ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில், மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி புதிய பாதை திட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், அதை கைவிடக் கூறியதால் அது கைவிடப்பட்டது என்று தெரிவித்திருந்தார். கடந்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ 100 கோடியும் வழக்கமான பட்ஜெட்டில் ரூ 18 கோடியும் ஒதுக்கி இருப்பதை ஏற்கெனவே சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளேன். அதற்கு முழு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளேன். இப்போது அந்தத் திட்டமே கைவிடப்பட்டது என்று அவர் அறிவித்தது அதிர்ச்சியை அளித்தது. அதுவும் தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அது கைவிடப்பட்டதாக அவர் அறிவித்தார். இதற்கு தமிழக அரசு பதிலளிக்கட்டும் என்று காத்திருந்தேன். தமிழக அமைச்சரும் இந்த திட்டத்தை கைவிடச் சொல்லி தாங்கள் கூறவில்லை என்றும் ரயில்வே அமைச்சர் கூறுவது பொய் என்றும் தாங்கள் கூடுதலாக நிதி ஒதுக்கத் தான் கோரியிருந்தோம் என்று விளக்கி இருந்தார்.

இப்போது ரயில்வே அமைச்சர், "தமிழக அரசு கைவிட கோரியது தனுஷ்கோடி திட்டத்தை தான் என்றும் செய்தியாளர்களுடைய சத்தத்தால் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தமிழக அரசு தூத்துக்குடி திட்டத்தை கைவிடக் கூறியதாக கூறிவிட்டதாகவும் உண்மையில் தூத்துக்குடி திட்டம் கைவிடப்படவில்லை என்றும் அதற்கு நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை இல்லை என்றும் இப்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியது அனைத்து ஊடகங்களிலும் ஒரே மாதிரியாக வந்துள்ளபோது, சத்தத்தால் குழப்பம் ஏற்பட்டதாக அமைச்சர் சொல்வது ஏற்கக் கூடியதாக இல்லை. செய்தியாளர் சந்திப்பின் காணொலியும் மிகத்தெளிவாகவே உள்ளது.

அமைச்சர் வேண்டுமென்றே தமிழக அரசின் மீது பழிபோடவே அவ்வாறு கூறினார் என்று எண்ணத் தோன்றுகிறது. உண்மை அப்படி இருக்கும் பட்சத்தில் ஊடகங்களில் வந்த செய்தியை உடனடியாக ஏன் மறுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. எல்லா விமர்சனங்களுக்குப் பிறகு ஐந்து நாட்களுக்குப் பின் இப்போது தான் ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

ரயில்வேதுறை வெளியிட்டுள்ள விளக்கம்

இப்படித்தான் அவர்கள் நாடாளுமன்றத்தில் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு திசை திருப்பும் பதில் அளிக்கிறார்கள். மழைக்கால கூட்டத்தொடரில் ரயில்வே அமைச்சர் அவையில் பேசிய ஆவேச பேச்சு மோசமான பதிலுக்கு நல்லதொரு உதாரணம். அதே போன்ற தொனியில் தான் தமிழ்நாடு அரசின் மீது பழி கூறிய அமைச்சரின் பேச்சும்.

புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானம் 30 சதவிகிதம் பலமற்று இருக்கிறது என ரயில்வே பாதுகாப்பு அமைப்பு குற்றம் சாட்டியபோது வாய்திறக்காத பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சரின் பொய்யான தகவலை நம்பி வேகவேகமாக போராட்டத்தை அறிவித்துள்ளார். அவரை தொடர்ந்து அதிமுகவும் போராட்டத்தை அறிவித்தது. உண்மையில் ஒன்றிய அரசு ரயில்வே துறையில் தமிழ்நாட்டை தொடர்ந்து எப்படி புறக்கணித்து வருகிறது என்பதை பற்றி அடிப்படை புரிதல் இருக்கும் யாரும் அமைச்சரின் பேச்சு எவ்வளவு அபத்தம் என்பதை ஆராயாமலே புரிந்து கொள்ள முடியும்.

ரயில்வே அமைச்சகமும் ரயில்வே அமைச்சரும் மக்கள் மத்தியில் உண்மையைப் பேச இனியாவது முன் வர வேண்டும். அந்த அளவு முயற்சிப்பது கடினம் என்றால் குறைந்த பட்சமாக மதுரை - தூத்துக்குடி திட்டத்திற்கான நிதியையாவது வரும் பட்ஜெட்டில் போதுமான அளவு ஒதுக்கி நியாயம் வழங்க முயற்சிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

``நீர் ஆதாரத்தை வழங்கியவருக்கு மரியாதை" -தேவராட்டம், சிலம்பாட்டத்துடன் தேனியில் பென்னிகுக் பொங்கல்!

முல்லைப்பெரியாறு அணை தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீராதாராமாக உள்ளது. எனவே விவசாயிகள் பலரின் வீடுகளிலும் அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் படம் கடவுளுக்கு நிகராக மாட்டப்பட்டிருக்கிறது. பென... மேலும் பார்க்க

Congress: `இந்திரா பவன்' காங்கிரஸின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு... | Photo Album

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்திரா பவன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தை மல்லிகார்ஜுன கார்கே உடன் இணைந்து ரிப்பன் வெட்டி சோனியா காந்தி திற... மேலும் பார்க்க

Rahul Gandhi: ``தேச துரோகம்'' - RSS தலைவரை கடுமையாக தாக்கிய ராகுல் காந்தி!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உண்மையான சுதந்திரம் ராமர் கோவில் திறப்பில்தான் கிடைத்தது என்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். மேலும் மோகன் பகவத... மேலும் பார்க்க

அரசு செவிலியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் பெண்..!

இயற்கை விவசாயம் இப்போது படிப்படியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைய தொடங்கி இருக்கிறது. மும்பையைச் சேர்ந்த பெண் செவிலியர் ஒருவர் இயற்கை விவசாயம் சார்ந்த தொழிலில் சாதித்து வருகிறார். காவ்யா தோபாலே என்ற அ... மேலும் பார்க்க

Russia: உக்ரைன் போரில் கேரள இளைஞர் மரணம்; ஆபத்தில் 67 இந்தியர்கள் -வெளியுறவுத்துறை சொல்வதென்ன?

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய இராணுவ ஆதரவு சேவையில் (Russian Military Support Service) முன்களத்தில் பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த விவகாரத்தில் ரஷ்ய அரசுக்கு கடுமையான எதிர்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: உடலில் நீர் கோப்பது ஏன்... உணவுப்பழக்கத்தின் மூலம் குறைக்க முடியுமா?

Doctor Vikatan: உடலில் நீர்கோத்தல் என்பது எதைக் குறிக்கிறது... எந்தக் காரணங்களால் இப்படி உடலில் நீர் கோத்துக்கொள்ளும்... எப்படி சரி செய்வது?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர்அம்ப... மேலும் பார்க்க