கெத்து தினேஷின் புதிய படம்: போஸ்டர் வெளியிட்டு பொங்கல் வாழ்த்து!
அட்டகத்தி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் நன்கு அறியப்பட்டவராக மாறிய நடிகர் தினேஷின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பொன்று இன்று(ஜன. 15) வெளியாகியுள்ளது.
‘கருப்பு பல்சர்’ படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டு படக்குழுவினர் பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
இயக்குநர் முரளி கிருஷ் இயக்கும் ‘கருப்பு பல்சர்’ படத்தில் தினேஷ் நடிக்கிறார். இத்திரைப்படத்தை யஷோ எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஒளிப்பதிவாளராக பாஸ்கர் ஆறுமுகமும், இசையமைப்பாளராக இன்பராஜ் ராஜேந்திரனும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.