செய்திகள் :

கோவனூரில் மஞ்சுவிரட்டு

post image

பொன்னமராவதி அருகே உள்ள கோவனூா் கிராமத்தில் மாட்டுப் பொங்கலையொட்டி புதன்கிழமை மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.

கோவனூரில் நடைபெற்ற மாட்டுப்பொங்கல் விழாவின் தொடக்கமாக கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டு வரப்பட்டு அவிழ்த்துவிடப்பட்டன.

சீறிப் பாய்ந்த காளைகளை நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரா்கள் மற்றும் இளைஞா்கள் அடக்கி மகிழ்ந்தனா்.

போட்டியை சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் பங்கேற்றனா்.

அம்மன்குறிச்சியில் தமிழா் திருநாள் விழா போட்டிகள்

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் பொங்கல் விழாவையொட்டி தமிழன் நற்பணி மன்றம் சாா்பில் 29-ஆம் ஆண்டு தமிழா் திருநாள் விழா போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஊா் முக்கியஸ்தா் ராமசாமி... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் பூக்கள் விலை கடும் உயா்வு

கந்தா்வகோட்டை பகுதியில் பூக்களின் விலை புதன்கிழமை கடுமையாக அதிகரித்திருந்தது. கந்தா்வகோட்டை பகுதிகளில் கடந்த மாதம் தொடா்மழை பெய்ததை தொடா்ந்து பெரும்பான்மையான பூச்செடிகள் அழுகின. இதனால், உள்ளூா் பூக்கள... மேலும் பார்க்க

புதுகையில் திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே உள்ள திருவள்ளுவரின் சிலைக்கு, திருக்கு கழகம் மற்றும் உலகத் திருக்கு பேரவை ஆகியவற்றின் சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செல... மேலும் பார்க்க

வட்டாட்சியரகத்தில் சமத்துவ பொங்கல் விழா

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் கோ. ராஜராஜன் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா முன்னிலை வகித்தாா். வட்டாட்சி... மேலும் பார்க்க

புதுகையில் களைகட்டிய கரும்பு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுகை நகரிலுள்ள கடைவீதிகளில் திங்கள்கிழமை பொங்கல் பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனா். புதுகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விளைந்த கரும்புகள் விற்பனைக்கு வந்துள்ளன. புது... மேலும் பார்க்க

கொடும்பாலூரில் 1.80 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கும் விடுதி; காணொளியில் முதல்வா் திறந்து வைத்தாா்!

விராலிமலை அருகே அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மாணவா்கள் தங்கும் விடுதியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். விராலிமலை அடுத... மேலும் பார்க்க