மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம்!
புதுகையில் களைகட்டிய கரும்பு விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுகை நகரிலுள்ள கடைவீதிகளில் திங்கள்கிழமை பொங்கல் பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனா்.
புதுகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விளைந்த கரும்புகள் விற்பனைக்கு வந்துள்ளன. புதுகை சாந்தநாத சுவாமி கோயில், பிருந்தாவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மஞ்சள் கொத்து விற்பனை செய்யப்பட்டது. இதேபோல, மண்பானை விற்பனையும் வாழைப்பழம், தேங்காய், காப்புகட்டுவதற்கான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன.
உச்சத்தில் பூக்கள் விலை..
மலா் சந்தையில் திங்கள்கிழமை அதிகாலை முதலே பொங்கல் பண்டிகையையொட்டி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை தொடங்கியது.
வழக்கத்தை விட பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.