அமலாக்கத் துறை முன்பு திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீண்டும் ஆஜர்!
சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் தொகுதி திமுக எம்.பி. கதிர் ஆனந்த் இன்று(ஜன. 28) மீண்டும் ஆஜராகியுள்ளார்.
திமுக அமைச்சர் துரைமுருகனின் மகனும் மக்களவை உறுப்பினருமான கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான கல்லூரியில் ஜன. 21 ஆம் தேதி நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனையில் ரூ. 13.7 கோடிக்கான ஆவணங்கள், கல்லூரி லாக்கரில் உள்ள பணம் ரூ. 75 லட்சம், முக்கிய ஆவணங்களின் ஆதாரமான பென்டிரைவ், ஹார்டு டிஸ்க் ஆகியவற்றையும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | தில்லி மக்களுடன் ராகுல் காந்தி!
இதுதொடர்பான விசாரணைக்கு கதிர் ஆனந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை முன்னதாக சம்மன் அனுப்பியிருந்தது
அதன்படி, ஜன. 22 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக மக்களவை எம்.பி. கதிர் ஆனந்த் விசாரணைக்கு ஆஜரானார்.
மேலும் சில ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் கேட்டிருந்த நிலையில் அவர் இன்று(ஜன. 28) மீண்டும் ஆஜராகியுள்ளார்.